ETV Bharat / state

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் அமைச்சர்கள்! நாளை மா.சு. எடுக்கும் முடிவு என்ன? - MINISTERS ON TAMIL THAI VAZHTHU

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்திற்கு பிறகு நடைபெற்ற அனைத்து பட்டமளிப்பு விழாவையும் அமைச்சர் கோவி செழியன் புறக்கணித்த நிலையில் நாளை நடைபெறும் மருத்துவப் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் கோவி. செழியன், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் கோவி. செழியன், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Credits- Minister Govi. Chezhian, Minister Ma Subramanian, Governor R.N Ravi X pages)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2024, 10:45 PM IST

சென்னை: 'தமிழ்த்தாய் வாழ்த்து' விவகாரத்தை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்கும் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர்கள் பங்கேற்காமல் புறக்கணித்து வருகின்றனர். இந்த நிலையில் நாளை நடைபெறும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 37 வது பட்டமளிப்பு விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பங்கேற்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆளுநரும், ஆளுங்கட்சியும்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையே மூன்று ஆண்டுகளாகவே மோதல் இருந்து வருகிறது. உயர்கல்வித்துறைக்கும், ஆளுநர் மாளிகைக்கும் இடையேயான மோதல் போக்கு வெளிப்படையாக நடைபெற்று வந்தது.

பல்கலைக்கழகமும், துணைவேந்தர் நியமனமும்: குறிப்பாக துணைவேந்தர் நியமனத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர் நியமனம் நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது. உயர்கல்வி அமைச்சராக இருந்த பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டு, உயர்கல்வித்துறை அமைச்சராக புதிதாக கோவி.செழியன் நியமிக்கப்பட்டார்.

திமுக அரசை பாராட்டிய ஆளுநர்: கடந்த வாரம் சென்னையில் கொட்டி தீர்த்த வடகிழக்கு பருவமழையை தமிழக அரசு சிறப்பாக கையாண்டது என தமிழ்நாடு ஆளுநர் ரவி பாராட்டு தெரிவித்தார். இதனால் ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் இடையேயான உறவில் மாற்றம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகின. இந்நிலையில், திடீரென கடந்த வாரம் சென்னையில் ஆளுநர் ரவி பங்கேற்ற விழாவில், தமிழ் தாய் வாழ்த்து பாடலில் திராவிடம் என்ற சொல் விடுபட்டதற்கு, முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

பட்டமளிப்பு விழா புறக்கணிக்கும் அமைச்சர்: புதிய உயர்கல்வித்துறை அமைச்சராக கோவி செழியன் பொறுப்பேற்ற பிறகு ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருக்காது துணைவேந்தர் நியமனங்கள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்தாய் வாழ்த்து விவகாரத்தை தொடர்ந்து நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை கோவி செழியன் புறக்கணித்தார்.

இதையும் படிங்க: BBA, BCA படிப்புகளுக்கு புதிய அனுமதி வழங்குவதை நிறுத்த உத்தரவு

இதில் அக்.22 ஆம் தேதி நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவையும் இன்று நடைபெற்ற மதர் தெரேசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவையும் கோவி செழியன் புறக்கணிப்பு செய்தார். மேலும் வரும் அக்.27 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவையும் கோவி. செழியன் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கோவி செழியன் சொல்வதென்ன?: பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியனிடம் தொடர்புக் கொண்டு கேட்டபோது, "முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்தை தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் துவங்கி வைத்து, அதற்கென சட்டத்தையும் உருவாக்கினார். ஆனால் தற்போதைய ஆளுநர் தாய் மாெழி தமிழை அவமதிப்பதிலும், பிற மொழி ஆதிகத்தை திணிப்பதிலும் இருப்பது தமிழக மக்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இது ஆளுநர் பதவிக்கு அழகல்ல. அதனை கண்டிக்கக்கூடிய வகையில் விழாவில் கலந்துக் கொள்ளவில்லை. ஆளுநருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதாக இருந்தாலும் அவரின் தனித்த நிலை செயல்பாடு முரணாக இருக்கிறது. அதை கண்டிக்கும் வகையில் தான் புறக்கணிக்கிறோம். ஆளுநரின் தமிழ் விரோதப் போக்கு என்பது கண்டிக்கத்தது. எனவே ஆளுநருடன் இணைந்து நிகழ்ச்சிகளில் கலந்துக் காெள்வதை புறக்கணிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொள்ளவார் என அவர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.