ETV Bharat / state

நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலப் பணிகளைத் தொடக்கி வைத்த அமைச்சர்கள்.. மக்களின் 50 ஆண்டு கோரிக்கை வெற்றி! - DMK Ministers

Needamangalam railway flyover work inaugurate: நீடாமங்கலத்தில் 170 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு அமைச்சர்கள் ஏ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

நீடாமங்கலம் ரயில்வே மேம்பால பணிகளை தொடக்கி வைத்த திமுக அமைச்சர்கள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 3:34 PM IST

திருவாரூர்: திருவாரூர், தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் நீடாமங்கலம் பகுதியில் கடந்த 50 ஆண்டு காலமாக ரயில்வே கேட் இயங்கி வருகிறது. காரைக்காலிலிருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில், மன்னார்குடியில் இருந்து செல்லும் விரைவு ரயில், அதே போன்று காரைக்கால் மற்றும் வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில் என 28 சரக்கு ரயில் என நாள்தோறும் 42 ரயில்கள் சென்று வருகிறது.

இதன் காரணமாக நீடாமங்கலம் ரயில்வே கேட் நாள் ஒன்றுக்கு 42 முறை மூடப்படுகிறது. இதன் காரணமாக ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கு மேலாக இந்த ரயில்வே கேட்டில் பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவி வந்தது.

மேலும், இந்த ரயில்வே கேட் வழியாக நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, மன்னார்குடி பகுதியில் இருந்து கும்பகோணம் மற்றும் அதன் வழியாக சென்னைக்கும் செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் நீடாமங்கலம் பகுதி மக்கள் மட்டுமின்றி இந்த ஊரைக் கடந்து செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வந்தனர்.

எனவே, இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 170 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட டெண்டர் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இந்நிலையில், இன்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் ரயில்வே மேம்பாலத்திற்காக அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் அங்குள்ள வர்த்தகர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அரை நூற்றாண்டு கால பிரச்சனைக்கு தீர்வு... நீடாமங்கலம் ரயில்வே கேட்டால் அவதிப்பட்ட மக்கள் பெருமூச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.