சென்னை : சென்னை அருகே வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்துட்ப நிறுவன கூட்டரங்கில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்று ஆசிரியர்களுக்கு விருது வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். இத்தனை ஆசிரியர் இருப்பதை பார்த்து பதற்றத்தில் இருக்கின்றேன். பள்ளி கல்லூரி சார்பில் 386 ஆசிரியர்கள் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வாங்குகின்றனர்.
விருது பெறும் ஆரியர்கள் மட்டும் அல்ல. அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள். வழக்கமாக மாணவர்கள் தான் சான்றிதழ் பெறுவார்கள். ஆனால், ஆசிரியர்கள் சான்றிதழ் பெறுவது மகிழ்ச்சி. இந்தியாவில் தமிழகத்தில் தான் கல்வி முறை சிறப்பாக அமைந்துள்ளது என இவ்வாறு பேசினார்.
ஆசிரியர் தினத்தையொட்டி 386 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளை சென்னை வண்டலூரில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் வழங்கினோம்.
— Udhay (@Udhaystalin) September 5, 2024
எல்லையற்றக் கல்வியை இல்லையென்று கூறாது எல்லோருக்கும் கொண்டு சேர்க்கின்ற ஆசிரியர் பெருமக்களுக்கு… pic.twitter.com/UFn0wuQ4Hr
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், " முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்தாலும், ஆசிரியர் பெருமக்களுக்கு வாழ்த்து செய்தி சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார். இன்று 386 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வழங்குதல் மூலம் நாங்கள் பெருமை அடைகிறோம்.
சமுதாயத்தொண்டு ஆற்றி வரும் அனைத்து ஆசிரியர்களும் எங்களை பொறுத்தவரை நல்லாசிரியர்கள் தான். அடுத்த தலைமுறை மாணவ செல்வங்களுக்கு அறிவாற்றலை ஊட்டும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்". இந்த நிகழ்வில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு; பள்ளியை சிறப்பு அதிகாரியை வைத்து நிர்வகிக்க அரசு பரிந்துரை! - krishnagiri fake ncc camp issue