ETV Bharat / state

'29 பைசா மோடி என அழைக்க காரணம் இதுதான்..' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

minister Udhayanidhi Stalin: 29 பைசா மோடி என அழைக்க காரணம் இதுதான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஒரு செங்கலை, எய்ம்ஸ் கட்டி முடிக்கும் வரையில், நான் திருப்பி அளிக்க மாட்டேன் என விமர்சித்துள்ளார்.

Udhayanidhi Stalin
உதயநிதி ஸ்டாலின்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 12:27 PM IST

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

தூத்துக்குடி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், இந்தியா கூட்டணியில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஓட்டப்பிடாரம் - மாப்பிள்ளையூரணியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், 'கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் கனிமொழி 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழியை வெற்றி பெற வைக்க வேண்டும். தூத்துக்குடியில், வின்ஸ்பாட் (WINSPOT) தொழிற்சாலை ரூ.14,000 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஆயிரம் கோடி மதிப்பில் இன்டர்நேஷனல் பர்னிச்சர் பூங்காவிற்கு நிதி ஒதுக்கி தொடங்கப்பட உள்ளது. ரூ.29 கோடி செலவில் அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் புயல் வந்தபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு ரூ.6,000 கொடுத்தார். ஆனால், மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. தூத்துக்குடி மழை வெள்ளத்தின் போது, 10 அமைச்சர்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் தங்கி இருந்தனர். ஒரு பைசா கூட ஒன்றிய அரசு கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

பிரதமர் மோடி இரக்கமற்ற ஒர் சர்வாதிகாரி. மிக்ஜாம் புயலுக்கு காசு கொடுக்கவில்லை. நீட் தேர்வினால் 22 குழந்தைகள் இறந்தனர். கரோனா நேரத்தில் மக்களை சிறையில் அடைத்து வைத்தார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டில் நிறைய பேரை சுட்டுக் கொன்றார்கள். எதற்கும் தமிழகத்திற்கு வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தல் என்பதால் தமிழகத்திற்கு வருகிறார்.

கடந்த 2019 ஜனவரி 27 மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டினார். அப்போது ஒரு கல்லை மட்டும் அவர் வைத்தார். அந்த ஒத்த கல்லையும், நான் தூக்கிட்டு வந்து விட்டேன். இப்போது கல்லை காணோம் எனத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். மருத்துவமனைக் கட்டி முடிக்கும் வரையில், நான் அந்த கல்லை திருப்பிக் கொடுக்க மாட்டேன். 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை, பணம் ஒதுக்கவில்லை. பாஜக ஆளும் ஆறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. இதுதான் தமிழ்நாட்டு மக்கள் மீது அவர் வைத்துள்ள, அக்கறை.

பிரதமர் மோடிக்கு 29 பைசா நான் ஒரு பெயர் வைத்திருக்கிறேன். அதற்கு காரணம் என்னவென்றால், தமிழ்நாட்டில் இருந்து ஜிஎஸ்டி வரி கட்டுகின்றோம். மத்திய அரசு அதை வாங்கிப் பிரித்து அனைவருக்கும் சமமாக தரவேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் இருந்து 1 ரூபாய் வாங்கிய மத்திய அரசு, வெறும் 29 காசு தான் கொடுக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக ஆளும் மாநிலத்தில், ஒரு ரூபாய் ஜிஎஸ்டி கட்டினால், 3 ரூபாய் திருப்பி கொடுக்கின்றது, மத்திய அரசு. பீகார் மாநிலத்தில் ஒரு ரூபாய் கட்டினால் ஏழு ரூபாய் கொடுக்கின்றது. தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கரை இல்லை. அதனால், தமிழ்நாட்டிற்கு மட்டும் 29 பைசா' என வழங்குவதாகவும் காரணம் கூறினார்.

மேலும் பேசிய அவர், 'தமிழ்நாட்டு உரிமைகளை யார் மதிக்கிறார்களோ? தமிழ்நாட்டு நிதியயை ஒழுங்காக யார் தருகிறார்களோ? அவர் பிரதமராக வர வேண்டும் எனவும், அதற்கு மு.க.ஸ்டாலின் யாரைக் கை காட்டுகின்றாரோ அவர்தான் அடுத்த ஒன்றிய பிரதமர் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குழந்தைக்கு "ரோலக்ஸ்" என உதயநிதி பெயர் வைத்தாரா? அண்ணாமலை குற்றச்சாட்டு உண்மையா? - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.