மதுரை : மதுரையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது மதுரை அச்சம்பத்து பகுதியில் உள்ள பாரா பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மனோஜை அவரது வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்தார்.
இவர் விளையாட்டு வீரர்களுக்கான மூன்று சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பணி பெற்றுள்ளார். அண்மையில் அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மணமக்கள் இருவரையும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்று திரும்பும் மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து தமிழக முதலமைச்சர் நாடு திரும்பியதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பாரா பாட்மின்டன் போட்டிகளில் தொடர்ந்து சாதித்து வரும் தம்பி மனோஜ் அவர்கள், நம் திராவிட மாடல் அரசில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப்பணி பெற்று பலருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.
— Udhay (@Udhaystalin) September 9, 2024
அண்மையில் அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், மதுரை… pic.twitter.com/LOeeE7Q8Ai
நடிகர் விஜய்யின் கட்சியை திமுக எப்போது எதிர்த்தது? அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் கேட்பது எப்படி சரியாகும்? என்றார். மேலும் அவரிடம் மகாவிஷ்ணு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டனர். ஆனால் அவை எவற்றிற்கும் பதிலளிக்காமல் காரில் ஏறி சென்று விட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: நடிகர் விஜய்யின் கட்சியால் யாருக்கு பாதிப்பு? - பாஜக ஹெச்.ராஜா சொல்வது இதுதான்! - H Raja Spok About TVK Party