ETV Bharat / state

உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம்.. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு! - TN ASSEMBLY SESSION 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 5:53 PM IST

Minister Udhayanidhi Stalin in Assembly: நான் முதல்வன் திட்டத்தின் திறன் சார்ந்த படிப்புகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, 45 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் துணை மருத்துவ படிப்புகள் விரிவுபடுத்தப்படும் என்று சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: 2024 - 2025ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து, சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் இருந்து பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (வியாழக்கிழமை) சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது.

அப்போது, அத்துறையின் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,

  • சமுதாயம் சார்ந்த அமைப்பில் இருக்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு மகளிர் வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கைகள் ஒருங்கிணைக்க அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மாவட்ட திறன் மையம் உருவாக்கப்படும்.
  • அரசின் முக்கிய திட்டங்களை கண்காணிக்க மாவட்ட அளவில் சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை கண்காணிப்பு அலகு உருவாக்கப்படும்.
  • வேலை வாய்ப்பினை எதிர்நோக்கும் தமிழ்நாடு இளைஞர்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு திறன் ஓலைகள் மற்றும் பணியிடப் பயிற்சி வழங்கும் திறன் தமிழ்நாடு நிறை பள்ளிகள் என்ற திட்டம் ரூ.100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
  • நான் முதல்வன் திட்டத்தின் திறன் சார்ந்த படிப்புகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 45 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் துணை மருத்துவப் படிப்புகள் விரிவுபடுத்தப்படும்.
  • நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறந்த ஆயிரம் மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து அரசு உயர் வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தர, சிகரம் தொடு என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
  • 2030இல் ஒரு ட்ரில்லியன் அமெரிக்கன் டாலர் இலக்கை எட்டுவதற்கு பெண்களின் பங்கு மிக முக்கியமானதாகும். எனவே, பெண்கள் முறை சார்ந்த தொழில்கள் மற்றும் உயர்தரப் பணிகளில் ஈடுபடுவது அவசியமானதாகும். இதற்காக தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு என்ற புதிய திட்டம் உலக வங்கியின் உதவியுடன் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும். இத்திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.1,185 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் இவ்வாண்டு ரூ.168 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனக் கூறினார்.

இதையும் படிங்க: “மயில் தேசியப்பறவை என்பதால் சிறையில் அடைக்க முடியாது” - அமைச்சர் மதிவேந்தன் பேச்சு! - TN Assembly Session 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.