ETV Bharat / state

ஒரே இரவில் உதயநிதி ஸ்டாலின் செய்த செயல்.. அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறுவது என்ன? - T R B Rajaa - T R B RAJAA

துணை முதலமைச்சர் திமுகவிற்காக அனுதினமும் அவரது உழைப்பைக் கொடுத்துள்ளார். திமுகவினர் கருவில் இருந்து, பிறந்த நொடியில் இருந்து கட்சியை உள்வாங்கியவர்கள் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் டி.ஆர்.பி ராஜா
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் டி.ஆர்.பி ராஜா (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2024, 7:31 PM IST

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையை மாற்றி அமைக்கும் விதமாக, முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரையை நேற்று ஆளுநர் மாளிகை ஏற்றது. இன்று புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், இலாகா மாற்றம் இல்லாமல் துணை முதலமைச்சரானார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன் மற்றும் எஸ்.எம்.நாசர் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பதவி ஏற்பு முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது, “உதயநிதி ஸ்டாலினின் துணை முதலமைச்சர் பொறுப்பு தலைவர் கொடுத்த மிகப்பெரிய பொறுப்பு. துணை முதலமைச்சர் இந்த இயக்கத்திற்காக அனுதினமும் அவரது உழைப்பைக் கொடுத்துள்ளார். திமுகவினர் கருவில் இருந்து, பிறந்த நொடியில் இருந்து கட்சியை உள்வாங்கியவர்கள்.

ஆடம்பர திருமணத்திற்கு எதிர்ப்பு குரல் கொடுத்தவர்: எங்கள் இளம் தலைவர் சிறு வயதில் இருந்து கொள்கை பிடிப்பு மாறாமல் வளர்ந்ததை பார்த்துள்ளோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 1996ஆம் ஆண்டு கால கட்டத்தில் ஆடம்பரமாக திருமணம் நடத்தியதைக் கண்டித்து, லயோலா கல்லூரியில் படிக்கும்போதே மக்கள் இப்படி இருக்கும் நிலையில், ஆடம்பரமான திருமணம் தேவையா? என்பதைக் கண்டித்து எதிர்த்து குரல் கொடுத்து போராடியவர் இன்றைய துணை முதலமைச்சர்.

திமுகவிற்கு வலு சேர்த்தவர்: கட்சிக்கு இவர் கொடி கட்டியவர், தாத்தாவிற்காக வாக்கு சேகரித்தவர். அந்த நாள் முதல் இன்று வரை கொள்கை பிடிப்போடு அவர் பயணித்ததால் தான் அனைத்து தொண்டர்களும் இனம் புரியாத அன்பை அவர் மீது வைத்திருக்கிறார்கள். அந்த அன்பின் வெளிபாட்டால் தான் முழுநேர அரசியலில் அவர் களம் இறங்கிய பின், மிகப்பெரிய அளவில் தேர்தல் களத்தில் வியூகங்களை அமைத்து, பிரச்சாரத்தின் மூலம் திமுகவிற்கு மிகப்பெரிய வலு சேர்த்தவர்.

இதையும் படிங்க: "வாரிசு அரசியலை முன்வைக்க பாஜகவிற்கு தகுதியில்லை" - செல்வப்பெருந்தகை!

களப்பணியாளருக்கான அடையாளம்: மாணவர் அணி, இளைஞர் அணியில் இருந்த பொழுது போராட்டங்களில் நேரடியாக களமிறங்கியுள்ளார். ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக உள்ளார். மக்களுக்கு பிரச்னை என்றால் நேரடியாக களமிறங்கி பார்க்கிறார். அதுதான் களப்பணியாளருக்கு முக்கியமான அடையாளம். அதனை இயல்பாக செய்கிறார். மற்றவர்களைப போல் கேமராவிற்காக இல்லாமல் மக்களுக்காக செய்கிறார்.

இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி: மக்களுக்காக பொறுப்புடன் செயல்பட்டதால் தான் சட்டமன்ற உறுப்பினராக அவர் சிறப்பாக பணியாற்றியதைப் பார்த்து மக்களும், தொண்டர்களும் கேட்டதன் படி தற்போது பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகளிலேயே இளைஞரணி நலன் மற்றும் விளையாட்டு துறையை புரட்டி போட்டுள்ளார்.

ஒலிபிக்ஸ் வரை சென்றவர்கள் அமைச்சரை புகழ்கிறார்கள். ஒட்டுமொத்தமாக ஒரே இரவில் பயிற்சியாளர்கள் இல்லாத இடங்களில் பயிற்சியாளர்களை நியமித்தவர். விளையாட்டுத் துறை அமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என்று இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் அவருக்கு வழங்கியுள்ள துணை முதலமைச்சர் பொறுப்பு திமுகவில் உள்ள இளைஞர்களுக்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியை வழங்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.