சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை சார்பில் நான்கு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அவை,
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து அமைக்கப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகள் ஒருங்கிணைப்பு மையத்தின் மூலம் திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, தமிழ்நாடு பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு இணையதளத்தை 20 லட்சம் மதிப்பீட்டில் துவக்குதல்.
மாநில திட்டக் குழுவின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நிலப் பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் (TNeGA) இணைந்து, மாநிலத்தின் நிலப்பயன்பாட்டு முறைகளுக்கான முன்கணிப்பு மாதிரி கருவியான நிலப் பயன்பாட்டு தகவல் அமைப்பினை (LUIS) உருவாக்குதல்.
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (MIDS)/ சென்னை பொருளியல் கல்வி நிறுவனம் (MSE)/ இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT) போன்ற உயர்தர கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, மாநில திட்டக் குழு பொது மேலாண்மையில் ஆறு மாத சான்றிதழ் படிப்பினை ஆண்டொன்றிற்கு ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் துவங்குதல்.
பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையும், தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் இணைந்து மாவட்ட அளவிலான பயிர் பரப்பளவை மதிப்பிடுவதற்கு அதிநவீனத் தொலை உணர்தல் மற்றும் ட்ரோன் அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பயிர் புள்ளிவிவரங்கள் சேகரித்து, முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னோடி திட்டமாகச் செயல்படுத்துதல்.
இதையும் படிங்க: முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினருக்கு இலவச தையல் இயந்திரம் - புதிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!