ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி.. பெருங்களத்தூர் பாலத்தை திறந்து வைத்த அமைச்சர்.. இனி ஜிரோ டிராஃபிக்! - Perungalathur Flyover - PERUNGALATHUR FLYOVER

பெருங்களத்தூரில் சென்னை - செங்கல்பட்டு மார்க்கமாகக் கட்டி முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படாததால் மக்கள் சிரமம் அடைவது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அந்த பாலத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.

அமைச்சர் மேம்பாலத்தை திறந்து வைத்த புகைப்படம்
அமைச்சர் மேம்பாலத்தை திறந்து வைத்த புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 10:04 AM IST

சென்னை: பெருங்களத்தூர் பகுதியில் ஏற்பட்டு வந்த பல ஆண்டுக்கால போக்குவரத்து நெரிசலுக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.234 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்பாலங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் பெருங்களத்தூர் சீனிவாசா நகரில் இருந்து ரயில்வே கிராஸிங் மேம்பாலமும், பெருங்களத்தூரிலிருந்து காமராஜர் சாலை மார்க்கமாகச் செல்லும் மேம்பாலமும், செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் மார்க்கமாகச் செல்லும் மேம்பாலமும், தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் மேம்பாலமும் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

அதன் பின்னர் கரோனா மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகளால் மேம்பாலம் கட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் மார்க்கமாகச் செல்லும் மேம்பாலப் பணிகள் விரைவாக கட்டப்பட்டுக் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் பெருங்களத்தூரிலிருந்து சீனிவாசா நகர் செல்லும் ரயில்வே கிராஸிங் மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் திறந்து வைக்கப்பட்டது.

இதையடுத்து தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் மேம்பாலம் ரூ.60.13 கோடி செலவில் பணிகள் பல்வேறு கட்டங்களாகக் கட்டப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த மேம்பாலத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு நேற்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் இணைந்து மக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலத்தினை திறந்து வைத்தனர். மேலும் புதிய மேம்பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்று சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதையடுத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காமராஜர் சாலை வழியாக ரூ.26 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் ஆறு மாத காலத்தில் அதனை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்படும். அந்த இடத்தில் வனத்துறைக்குச் சொந்தமான இடம் இருப்பதால் அதனை பெற்று பாலப்பணிகள் கட்டுவதற்கான அனுமதி கடிதம் கொடுத்துள்ளோம். இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அனுமதி கிடைத்தவுடன் பாலப்பணிகள் தொடங்கப்பட்டு ஆறு மாத காலத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

பெருங்களத்தூரில் இந்த மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதால் பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்கள் பயனடைவார்கள் இந்த பாலங்களில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் வாகனங்கள் சென்றடையும் அளவிற்கு கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பாலத்தின் மூலம் ரயில்வே கிராஸிங் பகுதியில் மக்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை கிடையாது பாலத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள வளைவில் திரும்பி விரைவாகச் சென்றடைய முடியும். மேலும், இந்த மேம்பாலம் திறப்பினால் பெருங்களத்தூர் பகுதியில் நெடுங்காலமாக ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சனைகள் குறைந்து பொது மக்களின் சிரமங்களும் குறையும். இதில் ஏதாவது குறைபாடு சிரமங்கள் இருந்தால் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு அதனைச் சரி செய்யப்படும்" இவ்வாறு கூறினார்.

பெருங்களத்தூர் மேம்பாலம் குறித்து ஈடிவி பாரத் வெளியிட்ட செய்தி - இனி பெருங்களத்தூரில் டிராபிக் கிடையாது.. மேம்பாலம் பணிகளின் தற்போதைய நிலை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.