ETV Bharat / state

" 1000 தனியார் பேருந்துகளை இயக்க திட்டம்" - அமைச்சர் சிவசங்கர்!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் சிவசங்கர்
அமைச்சர் சிவசங்கர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2024, 5:02 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொதுமக்களின் வசதிக்காக 14 ஆயிரத்து 86 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேருந்து கட்டணம் தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு, போக்குவரத்துத் துறை இணை ஆணையர்கள் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் சிவசங்கர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது, “ கடந்தாண்டைவிட குறைவான அளவில் ஆம்னிப் பேருந்துகளில் பொது மக்கள் முன்பதிவு செய்துள்ளனர் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளைப் போலவே கட்டணத்தை உயர்த்தாமல் ஆம்னிப் பேருந்துகளை இயக்க உள்ளனர்.

இதையும் படிங்க: தீபாவளியை முன்னிட்டு 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

ஆம்னி பேருந்துகள் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. புதிதாக பேருந்து வாங்குபவர்கள், தனியார் செயலியின் மூலம் அதிகப்படியான விலையில் டிக்கெட் விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து புகார் அளிக்கும் பட்சத்தில் அரசு சார்பில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக அனைத்து பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

சொகுசாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே அதிகப்படியான தொகையை கொடுத்து பயணிக்கின்றனர். விருப்பப்பட்டு பதிவு செய்பவர் புகார் தெரிவிப்பது இல்லை. தீபாவளி பண்டிகைக்கு அரசு கூடுதலாக பேருந்துகளை இயக்குகிறது. தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு வெளிப்படைத்தன்மையுடன் ஒப்பந்தம் வெளியிடப்பட்டது.

அதன் அடிப்படையில், ஒரு கிலோ மீட்டருக்கு 51 ரூபாய் 25 பைசா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் எங்கு ஊழல் நடைபெற்றது? தீபாவளிக்காக 1,000 தனியார் பேருந்துகள் தயாராக இருக்க கூறியுள்ளோம். விழுப்புரம் கோட்டத்தில் போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பேருந்துகளை இயக்க உள்ளோம்” என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.