ETV Bharat / state

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் மார்ச் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் சிவசங்கர் உறுதி! - வண்டலூர்

Transport Minister SivaSankar: முடிச்சூர் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம் மார்ச் மாத இறுதிக்குள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்தார்.

Transport Minister SivaSankar
அமைச்சர் சிவசங்கர் பேட்டி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 1:08 PM IST

அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை: வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுக் கடந்த மாதம் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த நிலையில் இன்று(ஜன.31) முதல் செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் வழியாகச் செல்லக்கூடிய அனைத்து தென் மாவட்ட பேருந்துகளும், கிளாம்பாக்கம் பகுதியிலிருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும், பயணிகளின் வசதிக்காகத் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 20 சதவீத பேருந்துகள், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று(ஜன.31) ஆய்வு மேற்கொண்டார். முழுமையாகப் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்ததைத்தொடர்ந்து எந்த மாதிரியான சிக்கல்கள் இருக்கிறது என்பது குறித்தும் அதிகாரிகளுடன் கேட்டறிந்து அதற்கான தீர்வுகளையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "காலை 6 மணியிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுவது துவங்கியுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில் 80 சதவீத பேருந்துகள், கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது. மீதமுள்ள 20% பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது.

வடசென்னை பகுதியைச் சேர்ந்த திருவெற்றியூர், ஆர்.கே.நகர், திரு.வி.க நகர், துறைமுகம் ஆகிய பகுதி மக்கள் மாதவரம் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தி தென் மாவட்டங்களுக்குச் செல்லலாம். வடசென்னையிலிருந்து கிளாம்பாக்கம் பகுதிக்கு வருவது கடினமாக உள்ளது என அவர்களுடைய கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 160 நடைகள் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மொத்தம் 710 நடைகள் இயக்கப்படுகிறது. திருச்சிக்கு 118 நடைகளும், சேலத்திற்கு 66 நடைகளும், விருத்தாசலத்திற்கு 30 நடைகளும், கள்ளக்குறிச்சிக்கு 50 நடைகளும், விழுப்புரத்திற்கு 59 நடைகளும், கும்பகோணத்திற்கு 52 நடைகளும், சிதம்பரத்திற்கு 18 நடைகளும், நெய்வேலிக்கு 44 நடைகளும் , புதுச்சேரி வழியாகக் கடலூருக்கு 32 நடைகளும், திண்டிவனம் வழியாகப் புதுச்சேரி செல்ல 35 நடைகளும், செஞ்சி வழியாகத் திருவண்ணாமலைச் செல்ல 135 நடைகளும், போளூர்க்கு 30 நடைகளும், வந்தவாசிக்கு 46 நடைகளும் இயக்கப்பட உள்ளது.

இதுவரை கோயம்பேடு பேருந்து நிலையத்தைப் பயன்படுத்திய வடசென்னை பகுதியைச் சேர்ந்தவர்கள் இனி மாதவரம் பேருந்து நிலையத்தையும், தென் சென்னை பகுதியைச் சேர்ந்தவர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும் பயன்படுத்தக் கேட்டுக்கொள்கின்றேன்.

கிளாம்பாக்கத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 135 நடை மேடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 110 பார்க்கிங்கில் வண்டிகள் நிறுத்துவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 77 நடைமேடைகளில் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 250 ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி இருந்த பொழுது சாலை, அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று எந்தெந்த இடத்தில் எல்லாம் நெருக்கடிகள் ஏற்படுகிறதோ ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

பேருந்து நிலையத்தில் மாற்றங்கள் ஏற்படும் போது அது வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுகிறது. மக்களின் தேவைக்கு அடிப்படையில் வசதிகள் சீர் செய்யப்படும். ஆம்னி பேருந்து ஊழியர்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் என்னென்ன வசதிகள் தேவையோ அவை உடனடியாக நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.

முதலில் பாரி முனையிலிருந்து பேருந்து நிலையம் செயல்பட்ட பொழுது அதனைச் சுற்றி இருந்தவர்களுக்கு அது வசதியாக இருந்தது. கோயம்பேடு பகுதியிலிருந்து இயக்கிய பொழுது, அதனைச் சுற்றி இருந்தவர்களுக்கு வசதியாக இருந்தது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தவுடன், இங்கு இருப்பவர்களுக்கு வசதியாக இருக்கும். வடசென்னை மக்களுக்கும், இதே போன்ற வசதி கிடைக்க வேண்டும் என்று தான் மாதவரத்திலிருந்து இயக்கப்படுகிறது.

ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்காக முடிச்சூர் பகுதியில் கட்டி வரும் புதிய பேருந்து நிறுத்தம் மார்ச் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும். அங்குச் செல்லும்பொழுது ஆம்னி ஊழியர்களுக்கு இன்னும் வசதியாக இருக்கும். மேலும் பேருந்து நிலையத்தில் மலிவு விலை உணவகம் அமைப்பது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது" என அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எடப்பாடி பகல் கனவு காண்கிறார்; பிரதமர் தேர்வில் அமமுக பங்கு நிச்சயம் இருக்கும்: டிடிவி தினகரன் கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.