ETV Bharat / state

“அரசின் நிர்வாகம் தெரியாமல் பேசுகிறார்” - பிரேமலதா விஜயகாந்திற்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி! - Minister Sivasankar - MINISTER SIVASANKAR

Minister Sivasankar: அரசு போக்குவரத்துக் கழகம் தனியார்மயமாக உள்ளது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதற்கு, அவர் அரசின் நிர்வாகம் தெரியாமல் பேசுகிறார் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சிவசங்கர்,பிரேமலதா விஜயகாந்த்  புகைப்படம்
அமைச்சர் சிவசங்கர் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் (Photo Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 9:57 PM IST

பெரம்பலூர்: தமிழக அரசின் உத்தரவுப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரம் பயனாளிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ரூ.19 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது, “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறுவது உறுதி. அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், புதிதாக வாங்கப்பட்டுள்ள விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தனியார் ஆம்னி பேருந்துகளில் உள்ளதைப் போல, செல்போன் சார்ஜ் வசதி, படுக்கை வசதி போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, அரசு போக்குவரத்துக் கழகம் தனியார்மயமாக உள்ளது என்று கூறியது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், பிரேமலதா விஜயகாந்த் அரசின் நிர்வாகம் தெரியாமல் பேசுகிறார். இந்தியாவிலேயே சுமார் 20 ஆயிரம் பேருந்துகள் உள்ள மிகப்பெரிய போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம். தற்போது 600க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்” என்றார்.

அதனைத் தொடர்ந்து, இலவச பேருந்துகள் இயக்கப்பட்டதால் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்குவதாக பிரேமலதா தெரிவித்துள்ளது குறித்து எழுப்பிய கேள்விக்கு, “இலவசம் கொடுத்ததினால் தான் போக்குவரத்து துறை உயிர் பெற்றிருக்கிறது. இந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்து 500 கோடி, தமிழக முதலமைச்சர் போக்குவரத்து கழகத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளார். அந்த நிதியால் போக்குவரத்து தொழிலாளர்கள் மாதம்தோறும் ஒன்றாம் தேதி ஊதியம் பெறுகிறார்கள்.

தொடர்ந்து பேசிய அவர், பேருந்து கட்டணம் உயர்வு என்பது தற்பொழுது கிடையாது. மற்ற மாநிலங்களில் டீசல், பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், பேருந்து கட்டணத்தை உயர்த்தாமலேயே போக்குவரத்துக் கழகத்தை நடத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: திமுக ஆட்சியின் வெற்றி ரகசியம் இதுதான்.. தருமபுரியில் முதலமைச்சர் பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.