ETV Bharat / state

மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் மழை நீர் வடிகால் பணிகளில் துரிதம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்! - chennai rainwater drainage

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 19, 2024, 7:25 PM IST

Chennai rainwater drainage: சென்னையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் வடிகால் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

மழை நீர் வடிகால் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு
மழை நீர் வடிகால் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: வடசென்னை பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா ஆகியோர் பெரம்பூர், ஓட்டேரி சந்திப்பு ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அமைச்சர் சேகர்பாபு பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "2022ஆம் ஆண்டு தமிழ்நாடு பேரிடர் காலத்திலும், பருவமழையின் போதும் ஏற்படுகின்ற இயற்கை சீற்றத்தை சமாளிப்பதற்கு முன்கூட்டியே திட்டமிடல் என கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து எடுத்து வருகிற நடவடிக்கை காரணமாக ஆண்டாண்டுக்கு தண்ணீர் தேக்கம் என்பது பருவமழை காலங்களில் குறைந்து வருகிறது.

அந்த வகையில், இன்றைக்கு மெட்ரோ ரயில் பணிகள் பல இடங்களில் நடைபெற்று வரக்கூடிய நிலையில், புதிய ரயில் பாதை அமைக்கின்ற பணி எங்கெல்லாம் நடைபெற்று வருகிறதோ, அப்பகுதியில் கால்வாய்கள் வருகிறது என்றால், அதற்கு மாற்று ஏற்பாடாக மழைநீர் வடிகால் பணிகளை குறுகிய காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, அதிகாரிகளுடனும், மேயருடனும் ஒருங்கிணைந்து ஆய்வினை மேற்கொண்டு இருக்கிறோம்.

குறிப்பாக, ஓட்டேரி கால்வாய் அமைந்துள்ள பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளால் ஒரு குறிப்பிட்ட 250 மீட்டருக்கு பழைய கால்வாயை நீக்க வேண்டிய சூழல் உள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக இரண்டு மீட்டர் விட்டம் கொண்ட கான்கிரீட் கற்களால் ஆன ஒரு பழுப்பையும் தொடர்ந்து, அதை இணைக்கின்ற ஒரு மழை நீர் கால்வாயில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அதனை இன்று ஆய்வு செய்தோம்.

சிம்சன் பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை வருகிற இடத்தில் கிட்டத்தட்ட 200 மீட்டர் அளவிற்கு மழைநீர் கால்வாய் அமைந்திருப்பதால், மாற்று ஏற்பாடாக அந்த இரண்டு பகுதிகளை ஒட்டி வளைவை ஏற்படுத்தி பெருமழை வந்தாலும் தடை இல்லாமல் ஏற்ற வகையில் மழை நீர் கால்வாய் வைக்கின்ற பணி 60 மீட்டர் தொலைவிற்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணியும் விரைவில் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களை அழுத்தம் கொடுத்துள்ளோம்.

மெட்ரோ பணிகள் நடைபெறும் இடத்தில் தேவை என்றால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு கசப்பிற்கு பிறகு தான் ஆரோக்கியம் கிடைக்கும். விரைந்து எந்த அளவுக்கு பணிகள் முடிக்க முடியுமோ அந்த அளவுக்கான முயற்சிகள் செய்து வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தல் முன்பு தொடங்கப்பட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் இருந்ததால் எந்த ஒரு புது டெண்டரும் போட முடியாது. பெரும்பாலும் சாலைகள் நன்றாகத்தான் உள்ளது. ஒரு சில பகுதிகளில் சாலைகள் குண்டு குழியுமாக உள்ளது, அதனையும் அரசு சரி செய்து வருகிறது" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: திடீரென ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட வழக்கறிஞர்கள்.. எழும்பூர் கோர்ட் வளாகத்தில் களேபரம்! - Lawyers Clash in Egmore Court

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.