ETV Bharat / state

திருவண்ணாமலை கோயிலுக்கு விரைவில் 2வது மாஸ்டர் பிளான்: அமைச்சர் சேகர்பாபு தகவல் - Annamalaiyar Temple 2nd Master Plan - ANNAMALAIYAR TEMPLE 2ND MASTER PLAN

2nd Master Plan For Annamalaiyar Temple: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு 2வது மாஸ்டர் பிளான் விரைவில் போடப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 2:36 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைக்கான விவாதம் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூன் 24) பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை குறித்த நான்காம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

அப்போது சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில், "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கான மாஸ்டர் பிளான் திட்டம் தயாராகி உள்ளதா? அண்ணாமலையார் கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதேபோல் கோயிலின் தங்க வைப்பு நிதி மூலம் வங்கிகளில் எவ்வளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது?" எனவும் சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பணிகள் குறித்து மாவட்ட அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் 10 நாட்களுக்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும், திருவண்ணாமலை கோயிலுக்காக முதற்கட்ட மாஸ்டர் பிளான் திட்டத்திற்காக ரூ.36.41 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், திருவண்ணாமலை கோயிலுக்கு ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பௌர்ணமி நாளில் 30 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

ஆகவே, பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த 2வது மாஸ்டர் பிளேன் விரைவில் போடப்பட உள்ளதோடு, இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளது. அதேபோல், திருக்கோயிலின் தங்கங்களை உருக்கும் பணி மூலம் கோயில் தங்கங்கள் உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு ரூ.5.74 கோடி வைப்பு நிதியாக வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளது.இதுமட்டும் அல்லாது, தங்கக் கட்டிகள் வைப்பு நிதி மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் 14 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

இதேபோல, "கல்வராயன் மலை கள்ளச்சாராய மலையாக அழைக்கப்பட்டு வருகிறது. அந்த நிலையை மாற்ற கள்வாராயன் மலையை சுற்றுலாத்தலமாக மாற்ற அரசு முன்வருமா?" என்று சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

ஈஸ்வரனின் கேள்விக்கு பதிலளித்த சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், "கல்வராயன் மலை என்பது மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளம். அதனை மேம்படுத்துவது அவசியமானதுதான். ஆனால், கல்வராயன் மலையை சுற்றுலாத்தலமாக மேம்படுத்துவது குறித்து நிதிநிலைக்கு ஏற்ப முதலமைச்சரின் உத்தரவு பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.