ETV Bharat / state

50 புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்.. அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு! - TN Assembly Session 2024

Food and Consumer Protection: திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரூ.25.70 கோடி மதிப்பீட்டில் 18,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய 6 நவீன நெல் சேமிப்புத் தளங்கள் நபார்டு நிதி உதவியுடன் அமைக்கப்படும் என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Sakkarapani
அமைச்சர் சக்கரபாணி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 9:39 PM IST

சென்னை: கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்றும் துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவிப்புகளை அமைச்சர் சக்கரபாணி பேரவையில் அறிவித்தார். அவைகளாவன,

நுகர்வோரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பயிற்சி பெற்ற சுய உதவிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு, தமிழ்நாடு நுகர்வோர் நல நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் செலவில் விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்படும்.

தேசிய உலக நுகர்வோர் நுகர்வோர் தினம் மற்றும் உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான நுகர்வோர் விழா, கல்வி நிறுவனங்களில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் மூலம் கொண்டாடப்படும். தமிழ்நாடு நுகர்வோர் நலநிதியிலிருந்து ரூ. 50 லட்சம் இதற்காக செலவிடப்படும்.

நுகர்வோர், நுகர்வோர் ஆர்வலர்கள் மற்றும் நுகர்வோர் சட்டங்களைச் செயல்படுத்தும் முகமைகளுடன் இணைந்து நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான கருத்துப் பட்டறைகள் தமிழ்நாடு நுகர்வோர் நலநிதியிலிருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடத்தப்படும்.

பொது விநியோகத் திட்டப் பொருட்களின் துரித நகர்வுக்கு போக்குவரத்து வழித்தடங்கள் சீரமைக்கப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் பூச்சி தாக்குதல் தடுப்புப் பணிக்காக 2,000 புறஊதாக்கதிர் விளக்குப் பொறிகள் ரூபாய் 85 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

சென்னை (வடக்கு), சென்னை (தெற்கு), திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சிவகங்கை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 100 அமுதம் நியாய விலைக் கடைகள் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிதியினைக் கொண்டு மேம்படுத்தப்படும்.

வேளாண் பெருங்குடி மக்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகள் முறையாக அரவை செய்யப்பட்டு பொது விநியோகத் திட்டத்திற்குச் சென்று சேர்வதை உறுதி செய்திடும் வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தனியார் அரவை ஆலைகளின் மின்நுகர்வு கண்காணிக்கப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகள் மற்றும் நவீன அரிசி ஆலைகளின் வளாகங்களில் பசுமைச்சூழல் மேம்படுத்தப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர் மற்றும் காவலர்களை உள்ளடக்கிய 4,710 பணியாளர்களுக்கு நடப்பு நிதியாண்டில் ரூபாய் 2 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிதியினைக் கொண்டு சீருடைகள் வழங்கப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் கழகத்தில் பணிபுரியும் 488 வாணிபக் கழகத்தில் தரக்கட்டுப்பாட்டுப் பணியாளர்களுக்கு, இன்றியமையா உணவுப் பொருட்களின் தரத்தினை உறுதி செய்வதற்காக 2024-2025ஆம் நிதியாண்டில் ரூபாய் 25 லட்சம் செலவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிதியினைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.

தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, நாகப்பட்டிணம், திண்டுக்கல், இராமநாதபுரம், தென்காசி, தேனி, கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒவ்வொன்றும் தலா 30 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

நடப்பாண்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான 6 நவீன அரிசி ஆலைகளில் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிதியினைக் கொண்டு நிறுவப்படும்.

செங்கல்பட்டு, கடலூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் மொத்தம் 13,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய வட்ட செயல்முறைக் கிடங்கு வளாகங்கள் நபார்டு நிதியுதவியுடன் ரூபாய் 29 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரூபாய் 25 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் 18,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய 6 நவீன நெல் சேமிப்புத் தளங்கள் நபார்டு நிதி உதவியுடன் அமைக்கப்படும்.

பொது விநியோகத் திட்டத்தின் பயன்பாட்டில் உள்ள கிடங்குகளின் கொள்ளளவை மேம்படுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு 28,250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 26 கூடுதல் சேமிப்புக் கிடங்குகள் 17 மாவட்டங்களில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் நபார்டு நிதியுதவியுடன் கட்டப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தொடர் பயன்பாட்டில் இருந்துவரும் 22 மாவட்டங்களில் அமைந்துள்ள 31 சொந்தக் கிடங்கு வளாகங்களில் சாலை மற்றும் சுற்றுச்சுவர் கட்டமைப்புகள் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நபார்டு நிதியுதவியுடன் மேம்படுத்தப்படும்.

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் 11 சேமிப்புக் கிடங்கு வளாகங்களிலுள்ள மின்னணு எடை மேடைகள் 60 மெட்ரிக் டன் எடையளவு கொண்ட குழியற்ற மின்னணு எடைமேடைகளாக ரூபாய் 2 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மாற்றியமைக்கப்படும்.

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் பணிகள் இணையதளம் வாயிலாக நடைபெற கிடங்கு மேலாண்மைத் தீர்வு" (Warehouse Management Solution) மென்பொருள் ரூபாய் 2 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் நிதியின் மூலம் நிறுவப்படும்.

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள பழமையான 9 சேமிப்புக் கிடங்கு வளாகங்களில் உள்ள 53 கிடங்குக் கட்டடங்கள் ரூபாய் 22 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வருடியுடன் கூடிய 41 அச்சுப்பொறி (Scanner-cum- Printer) மற்றும் 16 மடிக்கணினிகள் வழங்கப்படும்.

இதையும் படிங்க: குடும்ப அட்டையில் பெயர் நீக்கம்; உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முக்கிய தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.