ETV Bharat / state

"பூரண மதுவிலக்கு உடனடியாக கொண்டு வருவோம் என நாங்கள் கூறவில்லை" - அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்! - law minister ragupathi

புதிதாக அரசியல் கட்சித் தொடங்குபவர்கள் அனைவரும் கூறுவதை தான் நடிகர் விஜயும் கூறுகிறார். தனித்து எதுவும் கூறவில்லை என புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பு.
அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பு. (Credits- ETV Bharat Tamil Nadu)

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அகரப்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய இடங்களில் புதிததாக அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடங்களை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

"அகில இந்திய அளவில் மதுவிலக்கு கொண்டு வந்தால் தான் பூரண மதுவிலக்கு சாத்தியம் என்று கூறினோம். ஆனால், பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதுதான் திமுகவின் குறிக்கோள். 2016ம் ஆண்டு பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது உண்மையா? பொய்யா? என்று தெரியவில்லை. ஆனால் அன்றைய தேர்தலில் இந்த கருத்து கூறியதாலேயே 20 முதல் 30 தொகுதிகளை, திமுக இழக்கக் கூடிய சூழ்நிலை உருவாக்கியது என்ற கருத்து நிலவுகிறது.

குறிப்பாக திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொழிலாளர்கள் திமுகவுக்கு எதிராக வாக்களித்தனர் என்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது. அதனால் தான் இந்த தேர்தலில் படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என்று கூறினோம். அதன்படி 500 கடைகளை மூடியுள்ளோம்.

பூரண மதுவிலக்கு உடனடியாக கொண்டு வருவோம் என்று நாங்கள் கூறவில்லை. பூரண மதுவிலக்கு என்பது எங்களது லட்சியம். படிப்படியாகக் குறைப்பது என்பது எங்களுடைய நோக்கம். தனியார் பார்கள் அனுமதி பெற்று நடத்தி வருகின்றனர். அது ஒரு லக்சூரி பாராகும், டாஸ்மாக் பாருக்கும் அதற்கும் வித்தியாசம் உள்ளது.

அரசியல் கட்சி தொடங்கும் அனைவருமே கூறும் கருத்துக்களைத் தான் நடிகர் விஜயும் கூறுகிறார். தனித்து ஏதும் கூறவில்லை. நாங்கள் எங்கள் பாதையில் மிகத் தெளிவாக உள்ளோம். 2026 சட்டமன்ற தேர்தலில் எங்களுடைய இலக்கு 200 சீட். 234 லட்சியம்; அதில் 200 நிச்சயம். எங்களிடம் நேரடியாக யாரும் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. அனைத்து கூட்டணிக் கட்சிகளும், தலைவர்களும் அன்போடும், பாசத்தோடும் உள்ளனர். " என்றார்.

இதையும் படிங்க: தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் வெள்ளோட்டம் எப்போது? - அப்பாவு கொடுத்த அசத்தல் அப்டேட்!

மதுக்கடைகளைக் குறையுங்கள் அல்லது ராஜிநாமா செய்யுங்கள் என்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் விமர்சனத்துக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, "அன்புமணி ஆட்சியிலிருந்தால் அவருக்கு தெரியும். பூரண மதுவிலக்கு என்பது இந்தியா முழுவதுமாக கொண்டு வந்தால் மட்டுமே சாத்தியம்.

இருப்பினும் தமிழக முதலமைச்சர் தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வரக்கூடிய நடவடிக்கையை நிச்சயம் எடுப்பார். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாங்களும் தான் கேட்கிறோம்.

தேர்தல் அறிக்கையிலே நாங்கள் கூறியுள்ளோம். தமிழக அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது. மத்திய அரசு தான் நடத்த முடியும். 'சென்சஸ்' என்பது மத்திய அரசு பட்டியலில் உள்ளது" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.