சென்னை: நடப்பாண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் இம்மாதம் 20ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இன்று (வெள்ளிக்கிழமை) சிறு குறு நடுத்தர தொழில்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, மதுவிலக்கு, காவல் துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறுகின்றது.
அப்போது, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான பழனிவேல் தியாகராஜன், 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,
- மின் ஆளுமை இயக்குநரகத்தில் தனித்தியங்கும் ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்படும்.
- தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் நிறுவனங்களை மறு சீரமைக்கப்படும்.
- பெருங்குடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் அலுவலக இடவசதி அமைக்கப்படும்.
- புவிசார் கட்டமைப்பு உருவாக்கப்படும்.
- ஆரம்ப சுகாதார நிலையங்கள் ( PHCs) அரசுக் கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு அதிவேக இணைய அலைகற்றை வசதியை குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.
- குறைந்த கட்டணத்தில் இணையதள தொலைக்காட்சி சேவைகள் ( IP TV) வழங்கப்படும்.
- தமிழ்நாடு ஆழ்நிலைத் தொழில்நுட்பக் கொள்கை ( Tamilnadu Deep Tech Policy) உருவாக்கப்படும்.
- தமிழ்நாடு அறிவுசார் சொத்துரிமை கண்டுபிடிப்புகளின் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும்.
- அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் ( Government ITIs) மற்றும் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றிற்கு ICTACT நிறுவனம் வழங்கும் இலவச உறுப்பினர் சேவைகள் வழங்கப்படும்.
- ICTACT செயல்முறை ஆராய்ச்சி மையம் நிறுவப்படும்.
- தமிழ் கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் விரிவாக்கம் செய்யப்படும்.
- கணித்தமிழ் தொடர் சொற்பொழிவு நடத்தப்படும்.
- மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு நடத்தப்படும்.
- மின்னூலக அச்சுப் பக்கங்களை எழுத்துணரி (OCR) முறையில் உரைவடிவிற்கு மாற்றப்படும்.
இதையும் படிங்க: சட்டப் பேரவையில் நீட் விலக்கு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்!