ETV Bharat / state

"வணிகவரித்துறை அலுவலக செயல்பாடுகள் ரூ.5.48 கோடி செலவில் மேம்படுத்தப்படும்" - அமைச்சர் பி.மூர்த்தி அறிவிப்பு! - TN Assembly Session 2024

TN Commercial Taxes and Registration Department: பணி பளு மிகுந்த சார்பதிவாளர் அலுவலகங்களைப் பிரித்து புதியதாக சார்பதிவாளர் அலுவலகங்கள் தோற்றுவிக்கப்படும் என்பன உள்ளிட்ட 23 அறிவிப்புகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளார்.

வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி
வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 9:44 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைக்கான விவாதம் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. அந்த வகையில், சட்டப்பேரவையில் நேற்று (ஜூன் 26) வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறையின் அமைச்சர் பி.மூர்த்தி 23 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு:-

வணிகவரி:

  • வணிகவரித்துறை அலுவலகங்களில் பணி செயல்பாடுகள் ரூ.5.48 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
  • வணிகவரித்துறையில் உள்ள ஏழு மண்டல பயிற்சி மையங்களில், கணினி வழி பயிற்சி வழங்குவதற்குத் தேவையான கணினி உபகரணங்கள் ரூ.4.93 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்.
  • கடலூர் கோட்டத்திற்குட்பட்ட பழமையான நிலையில் உள்ள கடலூர் ஒருங்கிணைந்த வணிகவரி கட்டடத்தினை இடித்து புதிய வணிகவரி கட்டடம் ரூ.3 கோடி செலவில் கட்டப்படும்.
  • திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட அலுவலகங்களுக்கு புதிய ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.22 கோடி செலவில் கட்டப்படும்
  • சேலத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டட வளாகத்தில் சேலம் நுண்ணறிவு கோட்டத்திற்கு புதிய கட்டடம் ரூ.84 கோடி செலவில் கட்டப்படும்.
  • சேலம் கோட்டத்திற்குட்பட்ட 3 வரிவிதிப்பு வட்டங்களுக்கு ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.6 கோடி செலவில் கட்டப்படும்.
  • மதுரை கோட்டத்திற்குட்பட்ட பழமையான நிலையில் உள்ள வணிகவரி வளாக இணைப்பு கட்டடத்தினை இடித்து புதிய வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.6.30 கோடி செலவில் கட்டப்படும்.
  • மதுரை கோட்டத்திற்குட்பட்ட தேனியில் ஒருங்கிணைந்த வணிகவரித்துறை அலுவலக கட்டம் ரூ 6.30 கோடியில் கட்டப்படும்.
  • விருதுநகர் கோட்டத்திற்குட்பட்ட அலுவலகங்களுக்கு விருதுநகர் (நுண்ணறிவு) கோட்ட ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடத்தில் கூடுதல் தளங்கள் ரூ.4.60 கோடி செலவில் கட்டப்படும்.
  • காஞ்சிபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட அலுவலகங்களுக்கு காஞ்சிபுரத்தில் புதிய ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.4.20 கோடி செலவில் கட்டப்படும்.
  • மதுரையில் உள்ள பிராந்திய கோட்ட வணிகவரி பணியாளர் பயிற்சி நிலைய கட்டடம் ரூ.3.29 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு, அக்கட்டடத்திற்கு கூடுதலாக ஒரு தளமும் அமைக்கப்படும்.
  • வேலூர் கோட்டத்திற்குட்பட்ட ஆம்பூர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு புதிய வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.1.70 கோடி செலவில் கட்டப்படும்.
  • திருச்சி கோட்டத்திற்குட்பட்ட அறந்தாங்கி மாநில வரி அலுவலர் அலுவலகத்திற்கு புதிய வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.1.52 கோடி செலவில் கட்டப்படும்.
  • விருதுநகர் கோட்டத்திற்குட்பட்ட பரமக்குடி மாநில வரி அலுவலர் அலுவலகத்திற்கு புதிய வணிகவரி அலுவலக கட்டடம் ரூ.1.38 கோடி செலவில் கட்டப்படும்.
  • சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா பவள விழா நினைவு இணைப்பு கட்டடத்தில் இயங்கி வரும் இரண்டு மின்தூக்கிகள் (Lift) ரூ.59 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும்.
  • ஈரோடு கோட்டத்திற்கு உட்பட்ட கரூர் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் ரூ.26 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

பத்திரப்பதிவுத்துறை:

  • பதிவுத்துறைக்கு ரூ.100 கோடி செலவில் 96 புதிய பதிவுத்துறை அலுவலக கட்டடங்கள் கட்டப்படும்.
  • கும்பகோணம் மற்றும் விருத்தாசலம் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட பதிவாளர் (தணிக்கை) பணி அமைப்புகள் உருவாக்கப்படும்.
  • பணி பளு மிகுந்த சார்பதிவாளர் அலுவலகங்களைப் பிரித்து புதியதாக சார்பதிவாளர் அலுவலகங்கள் தோற்றுவிக்கப்படும்.
  • பதிவுத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு என்று LAN இணைப்பு ஏற்படுத்தப்படும்.
  • தணிக்கை மாவட்ட பதிவாளர்கள் மற்றும் பொதுப்பணித் துறையில் இருந்து பகராண்மையில் நியமனம் செய்யப்பட்ட உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோருக்கு புதிய வாகனம் வாங்கப்படும்.
  • அரசு கட்டடங்களில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகங்களின் கட்டமைப்புகள் நவீனப்படுத்தப்படும்.
  • சென்னை ராஜாஜி சாலையில் உள்ள பாரம்பரிய கட்டடத்தில் பதிவுத்துறைக்கு நவீன கூட்ட அரங்கம் (CONFERENCE HALL) மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

இதையும் படிங்க: திமுக ஆட்சியில் கோயில்களுக்குச் சொந்தமான 4,840.92 ஏக்கர் நிலங்கள் மீட்பு - அமைச்சர் சேகர்பாபு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.