ETV Bharat / state

வீடு கட்ட ஆன்லைன் மூலம் அனுமதி; புதிய திட்டம் குறித்து அமைச்சர் கூறுவது என்ன? - Online building permit scheme - ONLINE BUILDING PERMIT SCHEME

Online building permit scheme: சாதாரண மக்களுக்கு பயன்படுகிற வகையில் வீடு கட்டும் கட்டட அனுமதியை இணையதளம் வாயிலாக ஒற்றைச் சாளர முறையில் உடனடியாகப் பெறும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் முத்துசாமி புகைப்படம்
அமைச்சர் முத்துசாமி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 22, 2024, 7:26 PM IST

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, "வீட்டு வசதித்துறையில் ஆய்வின் போது மக்களுக்கு என்ன பிரச்சனை உள்ளது, அதை எப்படி சரி செய்து தீர்வு கொண்டு வர வேண்டும் என்ற ஆலோசனை செய்ததில், பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கட்டிட அனுமதி கொடுப்பதில் பல சிக்கல்கள் இருந்ததன் அடிப்படையில் முதலமைச்சர் ஆலோசனைப்படி பலவற்றை சுலபமாக்கி விடப்பட்டுள்ளது.

இதில் மிக முக்கியமாக பெரிய அளவிலே சாதாரண மக்களுக்கு பயன்படுகின்ற வகையில், இன்றைக்கு முதலமைச்சர் துவங்கி வைத்திருக்கிற 3400 சதுர அடி கட்டிடம் கட்டுவதற்கு அனுமதிக்காக மனு போட்டு கால தாமதம் ஏற்படுவது பல சிக்கல்களை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

மேலும் அதிகாரிகளுக்கும் நிறைய மனுக்கள் வருகின்ற காரணத்தினால், அவர்களுக்கும் வேலைகளும் அதிகமாக இருக்கிறது. இதனால் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது, இதையெல்லாம் உணர்ந்து தான் சாதாரண மக்கள் குடியிருப்பதற்காக கட்டுகின்ற மக்களுக்கு சுயசான்று அடிப்படையிலேயே கால தாமதமாக செய்யாமல் மனு அளித்த உடனேயே கிடைக்க வேண்டும் என்ற ஒரு திட்டத்தை சொல்லி அதன் அடிப்படையில் தான் முதலமைச்சர் இன்று துவங்கி வைத்தார்.

அதே போல் வீடுகளை கட்டி தரும் பொறியாளர்களையும் வழிநடத்தி வீடுகள் கட்டி தரப்படுகிறதா, ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை அவர்களே பார்த்துவிட்டு ஆன்லைனில் மனுவை அளித்துவிட்டு அவர்களே கட்டிக் கொள்ளலாம் என்பது தான் இந்த திட்டம். மேலும் தமிழ்நாட்டில் எங்கு வீடு கட்டினாலும் அதற்கு அனுமதி கொடுப்பதற்காக இந்த திட்டத்தை கொண்டுவரப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

எவ்வளவு மனுக்களுக்கு தீர்வு அளித்துள்ளோம் என்பது குறித்து வரும் ஐந்து நாட்களில் கண்காணிக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு மாதமும் இதேபோன்று எத்தனை மனுக்கள் வந்துள்ளன. அதில் தீர்வு அளிக்கப்படாத மனுக்களுக்கு என்ன காரணம் என்பதை கண்காணித்து உடனடியாக அவற்றுக்கு தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: காலையில் காகிதம் பொறுக்கியவர்..மாலையில் ஊழியர்... அமைச்சர் மா.சு. செய்த நெகிழ்ச்சி சம்பவம்! - Minister Ma Subramanian

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.