ETV Bharat / state

"அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தாமதமாக இதுதான் காரணம்"- அண்ணாமலைக்கு அமைச்சர் முத்துசாமி பதில்! - MINISTER MUTHUSAMY on Annamalai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 18, 2024, 9:56 AM IST

Athikadavu - Avinashi Project: அத்திக்கடவு - அவிநாசி திட்டம் துவங்கப்பட்டது பாஜக போராட்டம் நடத்தும் என்ற காரணத்தால் தான் எனக் கூறுவது முழுக்க முழுக்க தவறு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் முத்துசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் முத்துசாமி , அண்ணாமலை
அமைச்சர் முத்துசாமி - அண்ணாமலை (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களின் மக்கள் பயன்பெறும் வகையில், ரூ.1,916.41 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நேற்று சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இந்நிலையில், இத்திட்டம் துவங்கியது பாஜக போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என அண்ணாமலையின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் முத்துசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தைப் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், திமுக அரசின் மீது குறை சொல்வதைப் போல சில கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். அவற்றிற்கான விளக்கங்களை கொடுக்க விரும்புகிறேன். இத்திட்டத்தை நிறைவேற்ற திமுக அரசு காலதாமதம் செய்ததாக தெரிவித்துள்ளார். திமுக அரசு அமைந்தவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அத்திக்கடவு அவிநாசி திட்ட முன்னேற்றம் பற்றி ஆய்வு செய்தார்கள்.

அப்போது தான் இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தியதில், முதல் பம்பிங் ஸ்டேசனிலிருந்து 3வது பம்பிங் ஸ்டேசன் வரை மெயின் பை லைன் அமைக்க பல இடங்களில் நிலம் கையகப்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்தது. அந்த நிலம் இல்லையென்றால் முழு திட்டமுமே பயனற்றுத்தான் கிடக்கும்.

எனவே முதலமைச்சர் அதிகாரிகளிடமும், எங்கள் இடத்திலேயும் அந்த நில உரிமையாளர்களை சந்தித்து பேசி நிலம் கையகப்படுத்துகிற பணியை உடனடியாக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி, நாங்கள் ஒவ்வொரு விவசாயினுடைய வீட்டிற்கும் நேரடியாகச் சென்று இத்திட்டத்திற்கு தேவையான நிலத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

இத்திட்டத்தில் பம்பிங் ஸ்டேசன் மூன்றுக்கு கீழே உள்ள விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்றாலும் மேலே உள்ள மற்ற பல விவசாயிகளுக்கு இத்திடத்தின் மூலம் பயன் கிடைக்கும் என்ற உணர்வோடு தேவையான நிலத்தை கொடுப்பதற்கு பெருந்தன்மையோடு அவர்கள் ஒப்புதலை தந்தார்கள்.

அந்த ஒப்புதலை 29-09-2022 அன்று தான் முழுமையாக பெற முடிந்தது. அதன்பின் மெயின் லைனில் பணிகள் துவக்கி 4 மாத காலகட்டத்திற்குள் அதாவது, 2023 ஜனவரி 23ஆம் தேதி அன்று பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டது. பணி முடிந்தவுடன் சோதனை ஓட்டமாக தண்ணீர் எடுக்கப்பட்டது.

அப்போதுதான் ஏற்கனவே அமைக்கப்பட்ட கிளைக் குழாய்கள் பல இடங்களில் உடைந்தும் பழுதடைந்தும் இருப்பது தெரிய வந்தது. அவற்றையெல்லாம் உடனடியாக சரி செய்வதற்கான நடவடிக்கை வேகமாக எடுக்கப்பட்டது. உபரி நீர் போதிய அளவிற்கு கிடைக்காத காரணத்தால் சோதனை ஓட்டத்தை முழுமையாக நடத்த முடியவில்லை.

தற்போது தண்ணீர் மீண்டும் வந்த பின்தான் சோதனை ஓட்டம் வேகமாக செய்யப்பட்டு, 1045 குளங்களில் சிலவற்றை தவிர மற்ற அனைத்திற்கும் தண்ணீர் செல்லுகிற நிலை உருவாக்கப்பட்டது. உபரி நீர் மட்டும்தான் இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டி ஒன்றாகும்.

தற்போது வரும் உபரிநீரை மட்டும் வைத்துக் கொண்டு தொடர்ச்சியாக தண்ணீர் கொடுத்துவிட முடியும் என்று உறுதிப்படுத்த முடியாது. கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதில் இருந்து 15 நாட்களுக்கு மேல் கசிவு நீர் வருவதற்கான வாய்ப்பு உள்ளதென்றும், அப்படி வருகிற பொழுது தொடர்ச்சியாக அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலைமைகளையெல்லாம் கணக்கிட்டுத்தான் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று LBP வாய்க்கால் தண்ணீர் திறக்கப்பட்ட பின் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை ஆகஸ்ட் 17ஆம் தேதி திறக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், பாஜக போராட்டம் நடத்தும் என்ற காரணத்தால்தான் திட்டம் துவங்கப்படுவதாக அண்ணாமலை சொல்லுவது முழுக்க முழுக்க தவறானதாகும். உபரிநீர் பற்றாக்குறையே இத்திட்டம் துவங்க காலதாமதமானதற்கு காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

அதனால், முதலமைச்சர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் அதிகாரிகளோடு இத்திட்டம் பற்றி விவாதித்து ஆய்வு செய்தார்கள். மற்ற விவசாயிகள் யாரும் பாதிக்கப்பட்டு விடாத வகையில், தொடர்ச்சியாக அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள். அதையெல்லாம் தீர ஆய்வு செய்துதான் ஆகஸ்ட் 17ஆம் தேதி இத்திட்டத்தை துவக்கலாம் என்று அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இந்த உண்மைகளை அண்ணாமலை புரிந்து கொள்ளுவார் என்று நம்புகிறேன். நில உரிமையார்களுக்கு இழப்பீடு கொடுப்பது பற்றியும் அவர் தெரிவித்துள்ளார். இத்திட்டம் துவங்கப்பட்ட காலத்திலிருந்து குழாய் பதிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. திமுக அரசுதான் அதிகாரிகள் மூலமாக நில உரிமையாளர்கள் இடத்தில் பேசி, நிலப் பயன்பாட்டிற்கான இழப்பீடு தொகையை நிர்ணயித்து, அரசாணை வெளியிட்டு நிதியும் ஒதுக்கீடு செய்து இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்னும் சில நாட்களில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை சென்றடையும். சில நில உரிமையாளர்களோடு இழப்பீடு சம்பந்தமாக ஒப்பந்தம் முடியாமல் இருந்தது. தற்போது இழப்பீடு தொகையைப் பெற்று கொள்ள அதில் பல பேர் ஒப்புதல் வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு தனியே அரசாணை வெளியிடுவதற்கும், இழப்பீடு தொகை வழங்குவதற்கும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சரும் பல முறை அதிகாரிகளோடு மிகுந்த அக்கறையோடு ஆய்வை மேற்கொண்ட காரணத்தால்தான் இத்திட்டம் தற்போது பயன்பாட்டிற்கு வருகிற நிலை உருவாகியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை துவக்கி வைத்த முதலமைச்சர்.. கோவை, திருப்பூர், ஈரோடு மக்களின் கனவு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.