ETV Bharat / state

கோவை வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் புறக்கணிப்பு! - coimbatore Agri University

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 6:10 PM IST

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரும், வேளாண்மை துறை அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை.

மாணவர்களுக்கு பட்டம் அளித்த ஆளுநர் ஆர் என் ரவி
மாணவர்களுக்கு பட்டம் அளித்த ஆளுநர் ஆர் என் ரவி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமானஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். விழாவில் மத்திய அரசின் பயிர் ரகங்கள் மற்றும் உழவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் திலோச்சன் மொஹபத்ரா முதன்மை விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு ஆளுனர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 9 ஆயிரத்து 526 மாணவர்கள் இளமறிவியல், முதுநிலை பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் பிரிவில் பட்டம் பெற்றனர். இதில் 3 ஆயிரத்து 415 மாணவர்கள் நேரடியாகவும், உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இருந்து 6 ஆயிரத்து 111 மாணவர்கள் தபால் மூலமாகவும் பட்டங்களைப் பெற்றனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் வேளாண்மை பல்கலை கழக இணைவேந்தரும், வேளாண்மை துறை அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும் இணைவேந்தரான எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் இருந்து வரும் நிலையில், ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வுகளில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்காமல் புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: தமிழகத்துக்கு கல்விக்கான நிதி வழங்க மறுப்பதா? மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.