ETV Bharat / state

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் உயிரிழப்பு.. அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல்! - News Reader Died

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 5:25 PM IST

News Reader died: தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தாருக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

செளந்தர்யா
செளந்தர்யா (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தனியார் தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த சௌந்தர்யா (30) என்பவர், புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்தார். இந்த நிலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த சௌந்தர்யா உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஜூலை 26) காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், ஊடகம் மற்றும் பத்திரிகை துறையைச் சார்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு செய்தியாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்ட ஊடகத் துறையினர் மற்றும் பிறர் அஞ்சலி செலுத்தினர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: உங்க ஆபீஸ் டாய்லெட் க்ளீனா இருக்கா.. பெண்களின் உரிமைகளை பட்டியலிடும் WHO!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.