சென்னை: பிரதமர் மோடியின் காங்கிரஸ் - திமுக கூட்டணி பற்றிய விமர்சனம் குறித்தும் தேர்தல் பத்திரங்கள் குறித்தும் சென்னையில் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "பாஜக மிகப்பெரிய ஊழலில் சிக்கியதை திசைதிருப்பவே, உண்மைக்கு புறம்பான செய்திகளை மக்களிடம் பிரதமர் மோடி பரப்புகிறார். 2018 பாஜக ஆட்சியில் தான், முதன்முறையாக தமிழக மீனவர்களின் படகை இலங்கை கடற்படை கைப்பற்றி ஏலத்தில் விட்டனர். அதைக்கூட தடுக்க துப்பில்லாத பிரதமர் மீனவர் பிரச்னை, மீனவர்கள் பாதுகாப்பு குறித்து பேசுகிறார்.
ஒகி புயல் உள்ளிட்டவைகளால் பாதித்தபோது வராத பிரதமர் மோடி, புயலால் பெரிதாக பாதிப்பு இல்லை என்றார். ஆனால் அப்போதைய எதிர்க்கட்சிதலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் மக்களை நேரடியாக சந்தித்து பாதிப்புகளை கேட்டறிந்தார். கன்னியாகுமரி கடற்கரைக்கு கூட வராத மோடி, கன்னியாகுமரி அரசு மாளிகையில் புகைப்பட கண்காட்சியை மட்டும் பார்த்துவிட்டு சென்றார்.
அம்மக்கள் மீனவர்கள் அடிக்கடி கடலுக்குள் மீன்பிடிக்கும் போது காணாமல் போவதைத் தடுக்கவும், காணாமல் போனபவர்களை மீட்கவும் உதவி செய்ய மத்திய அரசுக்கு கன்னியாகுமரி மீனவர்கள் வைத்த கோரிக்கையை 10 ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை' எனக் குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், 'இன்றைக்கும் தமிழ்நாடு மீனவர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மீட்டுத் தர வலியுறுத்தி அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இதேபோல, சவுதி அரேபியாவில் சிக்கிக்கொண்ட தமிழ்நாடு மீனவர்களை அயலக அணியும், வெளிநாடுவாழ் தமிழர்களும் இணைந்து மீட்டனர். இப்படியான நிலையில், அவர்கள் எப்படி மீனவர்களை காப்பார்கள் என தெரியவில்லை.
பாஜக மிகப்பெரிய ஊழலில் சிக்கிக்கொண்டுள்ளது. இதனை மறைத்து மக்களின் கவனத்தை திசைத் திரும்பவே, பிரதமர் உண்மைக்கு புறம்பாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். 2019-ல் தேர்தல் பத்திர நடைமுறையை கொண்டு வந்தார்கள். இது ஒரு லூட்டிங் (looting).
ஆர்பிஐ, தேர்தல் கமிஷன் உள்ளிட்டவை இதனால், ஊழலை ஊக்குவிக்கும் வாய்ப்புள்ளது. வெளிப்படைத்தன்மையை அழித்து தேர்தல் நடைமுறையை இது சீரழிக்கும் என எச்சரித்தனர். இன்று கோடிக்கணக்கான பணத்தை பணக்காரர்களிடம் இருந்து மிரட்டி பெற்றுள்ளார்கள். பெரிய ஒப்பந்தகாரர்களிடமும், நஷ்டத்தில் இயங்கிய பல நிறுவனங்களின் உரிமையாளர்களிடமும் பணத்தை மிரட்டி பெற்றுள்ளனர்.
வருமான வரியிலிருந்து காப்பாற்றுவதற்காக அவர்களை நஷ்ட கணக்கு காட்ட வைத்தீர்களா? இல்லையெனில், பல லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி செய்து அவர்களிடம் லஞ்சம் போல இப்பணத்தை பெற்றுள்ளீர்களா? என கேள்வியெழுப்பினார்.
சீனா வட இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்தபோது, மௌனமாக பார்த்து கொண்டிருந்தீர்களா? 10 ஆண்டுகளில் உங்களது ஆட்சியில், நீங்கள் ஒரு விஷ்வ குருவாக இருந்திருந்தால், அரசியல் சாதுர்யத்தால், மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பின் மூலம் கட்சத்தீவை மீட்க முயற்சித்தீருக்கலாமே? என்று தெரிவித்தார்.
பெரும்பான்மையாக, 3 வழிகளில் பயமுறுத்தி வருமானத்துறை, அமலாக்கத்துறை ரெய்டு மூலம் அச்சுறுத்தி பாஜகவினர் நன்கொடை வாங்கினார்கள். நஷ்டத்தில் உள்ள கம்பெனிகளுடமும் திட்டமிட்டு மோசடி செய்துள்ளது.
இதை மிரட்டல் மூலம் பணம் பெறுவது என்றால் மாநிலங்களில் ஆட்சி செய்யும், திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதன் மூலம் ஏன் பணம் பெற்றன என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆரம்பம் முதல் இதனை பாஜக மட்டுமே ஆதரித்தது. இம்முறை அரசியலமைப்புக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. தேர்தல் பத்திரம் குறித்து ஒன்றிய சட்டத்துறை அமைச்சகத்திற்கு எப்படி தெரியாமல் போனது? அவர்கள் செய்த தவறு முழுமையாக வெளியாகியுள்ளது.
இதை மிரட்டல் மூலம் பணம் பெறுவது என்றால் மாநிலங்களில் ஆட்சி செய்யும், திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதன் மூலம் ஏன் பணம் பெற்றன என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆரம்பம் முதல் இதனை பாஜக மட்டுமே ஆதரித்தது. இம்முறை அரசியலமைப்புக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இப்போது இருட்டைக் கொண்டு ஓட்டை அடைப்பது நியாயமில்லை. எங்கள் மீது தவறு சொல்வது நியாயமற்றது. அவர்கள் செய்த தவறு ஆதாரங்களோடு வெளியாகியுள்ளது. இன்னும் கூட முழுமையான தகவலை ஏன் பெறவில்லை? என எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இதனை எதிர்க்கும் நீங்கள் (திமுக) இதன் மூலம் பணம் பெற்றது ஏன்? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் பத்திரம் மூலம் மிரட்டி பணம் பெற்றது போன்ற குற்றச்சாட்டுகள் பாஜக மீது மட்டுமே வைக்கப்படுவதாகவும், இது போல வேறு எந்த கட்சிகளும் மிரட்டி பணம் பெறவில்லை எனவும் கூறினார்.
கன்னியாகுமரியில் அப்பட்டமான பொய்களை பிரதமர் மோடி பேசி சென்றுள்ளதாகவும், அவை குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்புமாறும் சிரித்தபடியே பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், ஒன்றிய அரசின் வீடுகட்டும் திட்டம் உள்ளிட்டவைகளில் மாநில அரசின் பங்கை தொழில்துறை அமைச்சர் விளக்கியுள்ளார். 10 வருசம் அரைத்த மாவை அரைத்துக் கொண்டு வருகிறனர். இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் இது தொடரும் என்பதுதான் எங்களது வாதம் என தனது பேட்டியை முடித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: சிஏஏ சட்டத்தை மறுக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை - அண்ணாமலை தகவல்