ETV Bharat / state

“கவனக்குறைவே காரணம்”.. ஆவின் பெண் ஊழியர் விவகாரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ்! - Mano Thangaraj on Aavin Labour

Mano Thangaraj open up on Aavin Labour death: தற்போது ஏற்பட்டுள்ள விபத்தை தொடந்து, ஆவின் ஊழியர்கள் கோட் அணிவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ்
அமைச்சர் மனோ தங்கராஜ் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 8:26 PM IST

சென்னை: 2024-25ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் சேகரிப்பு உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள், பாரம்பரிய கால்நடை மூலிகை மருத்துவ பயிற்சி பெற்ற களப் பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, சென்னை நந்தனம் ஆவின் அலுவலகத்தில் நடைபெற்றது.

அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “இந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட 4 அறிவிப்புகளை இன்று முதல் செயலாக்கத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

ரூ.1 கோடி செலவில் விவசாய மக்களுக்கு பசுந்தீவன புல் கரணங்கள் வழங்குதல் மற்றும் புதிதாக சங்கங்கள் துவங்கிய கிராமங்களில் தேவைப்படும் உபகரணங்கள் வாங்க 1.25 லட்சம் ரூபாய் நிதியும், விவசாய கால்நடைகளுக்கு மற்றும் மாடுகளுக்கு வரும் சிறிய நோய்களை மூலிகை மருந்துகளால் குணப்படுத்த 3,000 பேருக்கு மருத்துவப் பயிற்சி நடத்தி சான்றிதழ் வழங்கி உள்ளோம்.

மேலும், குறைந்த விலையில் 20 முதல் 25 சதவீதம் மானியத்தில் சில மருந்துகளை விவசாய மக்களுக்கு கூட்டுறவு சங்கம் வாயிலாக பரிசோதனைக் கருவிகளை வழங்கும் திட்டத்தை துவக்கி உள்ளோம். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார். மேலும், பால் உற்பத்தி மற்றும் தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு, “35 முதல் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறோம். தற்போது போதுமான அளவிற்கு பால் கிடைக்கிறது. கடந்த ஆண்டு தான் 26 லட்சம் அளவிற்கு பால் உற்பத்தி குறைந்தது” என்றார்.

இதனைத் தொடர்ந்து, திருவள்ளூரில் ஆவின் பெண் தொழிவாளி உயிரிழப்பு குறித்து பேசிய அவர், "இதுவரை எந்த பிரச்னையும் வந்ததில்லை. அந்த கன்வேயர் பெல்ட்டில் அவரின் துப்பட்டா சிக்கிக் கொண்டது. அந்த பெண் ஊழியரின் கவனக்குறைவால் இதுபோன்ற நிகழ்வு நடந்துள்ளது.

கன்வேயர் பெல்ட் எப்போதும் மெதுவாக (குறைந்த வேகத்தில்) தான் செல்லும். அவர் நீளமான துப்பட்டா அணிந்திருந்ததால் விபத்து நேர்ந்திருக்கலாம். பொதுவாக, துப்பட்டா அணிய அனுமதிப்பதில்லை, இது ஊழியரின் கவனக் குறைவா அல்லது எதிர்பாராத விதமாக இதில் மாட்டி கொண்டாரா என்று தெரியவில்லை. இனி ஊழியர்கள் கோட் அணிவது தொடர்பாக நாங்கள் ஆலோசனை செய்து வருகிறோம்.‌ ஒரு விபத்து நடந்து விட்டது. உடனடியாக அந்த மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு அவருக்கு உரிய இழப்பீடு வழங்க பேசியிருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: “தமிழ்நாடு அரசுக்கு வெட்கமா இல்லையா?”.. அரசுக்கு ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் கடிந்து கொண்டது ஏன்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.