தஞ்சாவூர்: மூன்றாவது சர்வதேச பொது சுகாதார மாநாடு DPHICON 2024 நேற்று (அக்.3) தஞ்சாவூரில் நடைபெற்றது. இம்மாநாட்டினை முன்னிட்டு பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்ற பேரணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மேலும், தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியதாவது, “கடந்த ஆண்டை விட பிரசவத்தின் போது ஏற்படும் இறப்பு விகிதம் தற்போது 9 சதவீதம் குறைந்துள்ளது. மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டமாக விருதுநகர் அறிவிக்கப்பட்டுள்ளது. மகப்பேறு இறப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஒரே ஊசியைப் பயன்படுத்திய பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது அனைவருக்குமான பாடமாக அமையும். தமிழகத்தில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு இல்லை. போதுமான அளவில் மருந்துகள் உள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கிடங்குகள் உள்ளது.
தஞ்சாவூரில் மூன்றாவது சர்வதேச பொது சுகாதார மாநாடு DPHICON 2024 மிகச் சிறப்பாக நடைபெற்றது. #Masubramanian #TNHealthminister #DMK4TN pic.twitter.com/pt2BZLqQT8
— Subramanian.Ma (@Subramanian_ma) October 3, 2024
இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை என்ன?... அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்!
6 மாவட்டங்களில் இல்லாமல் இருந்த மருத்துவக் கிடங்குகள், தற்போது ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. அனைத்து மருத்துவக் கிடங்குகளிலும் அடிப்படைத் தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளதை 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார ஆய்வாளர் 1,066 பேர், கிராம சுகாதார செவிலியர்கள் 2 ஆயிரத்து 253 பேர் மற்றும் மருத்துவர்கள் 2 ஆயிரத்து 550 பேருக்கான பணி நியமனம் தொடர்பான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. மருத்துவப் பணியிடங்களுக்கான தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், எம்பி முரசொலி மற்றும் எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட சுகாதாரத்துறை உயர் அலுவலர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்