ETV Bharat / state

“தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் செவிலியர் கல்லூரி வரும்” - மா.சுப்பிரமணியன் உறுதி! - செவிலியர் கல்லூரி

Minister Ma Subramanian: தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், அரசு செவிலியர் கல்லூரிகள் கொண்டு வர மத்திய அரசிடம் கேட்டிருப்பதாகவும், விரைவில் வர வாய்ப்பு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Minister.Ma.Subramanian
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 1:09 PM IST

மா.சுப்பிரமணியன் பேட்டி

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ.18 கோடியே 30 லட்சம் மதிப்பில் அதி நவீன அறுவை சிகிச்சை மையத்தை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு, கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி 500 படுக்கைகள் கூடுதலாக இணைத்து, மொத்தம் 870 படுக்கை வசதியுடன் தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

அதன்படி, இந்த மருத்துவமனையில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக புறநோயாளிகளின் வருகை 1,000 ஆக இருந்தது. தற்போது புறநோயளிகள் எண்ணிக்கை 2,500 ஆக உயர்ந்துள்ளது. தினந்தோறும் உள் நோயாளிகள் எண்ணிக்கை 500 முதல் 600 ஆக இருந்து வருகிறது. மகப்பேறு பொறுத்தவரை, மாதம் 750 முதல் 800 வரை நடைபெற்று வருகிறது. தினந்தோறும் பிரசவம் 25 முதல் 30 வரை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது, மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு இருந்து வருகிறது. அரசு மருத்துவமனையில் ஏறத்தாழ ரூ.17.77 கோடி மதிப்பில் அதிநவீன 8 புதிய அறுவை சிகிச்சை அரங்கங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், மருத்துவமனையில் ரூ.52 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில், மகப்பேறுக்காக 12 படுக்கைகள் கொண்ட உயர் சார்பு தீவிர சிகிச்சை கொண்ட அமைப்பு ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, 18 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இனிமேல் சிகிச்சைக்காக சென்னை செல்லத் தேவையில்லை. திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலிருந்து வெளியேறும் கழிவுகள் தடுத்து நிறுத்தி, அப்பகுதியில் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கூறி இருக்கிறோம்.

மாவட்டத்திற்கு செவிலியர் கல்லூரி குறித்த கேள்விக்கு, மத்திய அரசிடம் 38 மாவட்டங்களுக்கும், 38 செவிலியர் கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் 5 அரசு செவிலியர் கல்லூரிகள் உள்ளன. விரைவில் அனைத்து மாவட்டத்திற்கு வர வாய்ப்பு இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, மருத்துவக் கல்லூரி இருப்பதால் கண்டிப்பாக செவிலியர் பயிற்சிக் கல்லூரி வரும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.