ETV Bharat / state

"இன்னும் எத்தனை தேர்தலுக்கு எய்ம்ஸை பயன்படுத்துவார்கள் என தெரியவில்லை" - மா.சுப்பிரமணியன் விமர்சனம்! - chennai news

Madurai AIIMS Hospital: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உலகத் தரத்தில் கட்டப்படுவதால் ஒவ்வொரு கல்லாக பார்த்து வாங்கிக் கொண்டிருப்பதாகவும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அடிக்கல் நாடப்பட்ட நிலையில் இன்னும் எத்தனை தேர்தலுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை பயன்படுத்துவார்கள் என்று தெரியவில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 4:56 PM IST

Updated : Feb 1, 2024, 6:30 AM IST

Tamil Nadu Health Minister Ma. Subramanian Press Meet

சென்னை: கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.30.5 கோடி செலவில் அதிநவீன உபகரணங்களுடன் 10 உயர் சிறப்பு அறுவை சிகிச்சை அரங்கம், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் 70 குளிரூட்டப்பட்ட தனி அறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொது மக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசால் கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டது. இங்கு, 1 லட்சத்து 5 ஆயிரத்து 198 புற நோயாளிகளும், 20 ஆயிரத்து 21 உள் நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர்.

இந்த மருத்துவமனையில் இதுவரை 792 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. 821 எண்டோஸ் சிகிச்சை, 749 எம்.ஆர்.ஜ ஸ்கேன், 2,413 டயாலிஸிஸ் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் தினமும் 750 முதல் 800 பேர் வரையிலான புற நோயாளிகள் பயன் பெற்று வருகின்றனர். தினசரி 180 முதல் 200 பேர் வரையிலான உள் நோயாளிகள் பயன் பெற்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி அதிநவீன டயாலிஸிஸ் இயந்திரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்டது. டெல்லி மருத்துவமனையில் இருக்கக்கூடிய பே வார்டு என்கிற கட்டணப் படுக்கை வசதிகளை, தற்போது மருத்துவமனையிலும் 70 தனி அறைகளைக் கொண்டு தொடங்கி வைத்துள்ளோம்.

இது போன்ற கட்டணப் படுக்கை வசதி அரசு மருத்துவமனையில் கொண்டு வருவது இதுவே முதல் முறையாகும். மேலும், கட்டணப் படுக்கை அறைகள் அனைத்தும் ஏசி வசதியுடன், டிவி, பிரிட்ஜ், பீரோ மற்றும் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் மற்றும் ஜசியூ சிகிச்சைப் பிரிவில் இருக்கக்கூடிய அனைத்து வசதியும் அந்த அறையிலேயே உள்ளது. அந்த அறைகளுக்குக் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.1,200 முதல் அதிகபட்ச கட்டணம் ரூ.3,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அதிநவீன உபகரணங்களுடன் அமைக்கப்பட்டுள்ள 10 உயர் சிறப்பு அறுவை சிகிச்சை அரங்குகளின் சுவர்கள் நோய்த் தொற்று கிருமிகள் படியா வகையில் தனித்துவமான உலோகம் மற்றும் பூச்சுகளால் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன அறுவை சிகிச்சை உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

எம்ஆர்பி செவிலியர்கள் போராட்டத்தை பொறுத்தவரையில் பேச்சுவார்த்தையின் போது கூறியது போல் பணி நிரந்தரம் செய்ய காலிப் பணியிடங்கள் ஏற்படும் போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2,300 செவிலியர்கள் உள்ளனர். 800 செவிலியர்கள் காலிப் பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ளனர். மற்றவர்களுக்குக் காலிப்பணியிடம் ஏற்படும் போது நிரப்பப்படுவார்கள். செவிலியர்களைப் போராட வேண்டும் என சிலர் தூண்டி விடுகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் 1,021 மருத்துவர்களை நியமனம் செய்வதற்குச் சான்றிதழ் சரிபார்க்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பணி நியமனத்திற்கான இடத்தை அவர்களே தேர்வு செய்யும் வகையில் அதிகளவில் காலியாக உள்ள ராமநாதபுரம், சிவகங்கை போன்ற எங்கு அதிக காலி இடங்கள் உள்ளது என்பதை விளம்பரப்படுத்துவோம், அதில் கலந்தாய்வு எடுத்து பணிக்குச் செல்லாம். இரண்டு நாட்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உலகத் தரத்தில் கட்டப்படுவதால் ஒவ்வொரு கல்லாகப் பார்த்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அடிக்கல் நாடப்பட்டது. தற்போது தான் மத்திய அரசு சுற்றுச்சூழலுக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது. இன்னும் எத்தனை தேர்தலுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையைப் பயன்படுத்துவார்கள் என்று தெரியவில்லை" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்தி புதுமை பெண் விருது பெற்ற பார்கவி.. பின்னணி என்ன?

Last Updated : Feb 1, 2024, 6:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.