ETV Bharat / state

தமிழ் வளர்ச்சித் துறை பணி நியமனத்தில் புதிய நடைமுறை; அமைச்சர் கொடுத்த அப்டேட்! - Department Of Tamil Development

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 4:05 PM IST

Minister M P Saminathan: தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர் பணி நியமனத்தில் தமிழ் எம்.ஏ., பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் செயல்படுத்தக் காரணமாக இருந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர், முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், சட்டமன்ற உறுப்பினர்கள் V.K.பழனிச்சாமி, N.மகாலிங்கம் உள்ளிட்டவர்கள் நினைவாக பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் 4.28 லட்சம் ரூபாய் மதிப்பில் நினைவு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த பணிகளை செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி, மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், நகராட்சி தலைவர் சியாமளா, நகரத் தலைவர் நவநீத கிருஷ்ணன், துணைத் தலைவர் தர்மராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுப் பணியினைத் தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேட்டியளித்த அவர், "தமிழ் வளர்ச்சித் துறையில் ஏற்கனவே தட்டச்சராக பொறுப்பேற்று அதன் பின் கண்காணிப்பாளராக பணியாற்றிய பின்பு உதவி இயக்குநராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டு பணியாற்றி கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் இனி இதுபோன்று அல்லாது, தமிழ் எம்.ஏ., படித்தவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில், தமிழில் எம்.ஏ., பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு டிஎன்பிசி மூலமாக உதவி இயக்குநர்கள் நியமனம் என்ற நடைமுறை கொண்டுவரப்படும்.

மேலும், வரும் காலங்களில் தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர்கள் பணிக்கான நியமனத்தில் 50 சதவீதம் இடஒதிக்கீடு தமிழ் எம்.ஏ., படித்தவர்களுக்கு வழங்கப்படும். இதுமட்டும் அல்லாது அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: வாலிபர்களுடன் சேர்ந்து வாலிபால் விளையாடிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! வீடியோ வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.