ETV Bharat / state

"நகராட்சிகளுடன் இணையும் ஒரு சில ஊராட்சிகள்" - அமைச்சர் கே.என்.நேரு அளித்த வாக்குறுதி என்ன? - Minister KN Nehru

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 14, 2024, 11:36 AM IST

K.N.Nehru: திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 5 பகுதிகளுக்கு பாதாளச் சாக்கடை திட்டத்துடன் கூடிய குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் அனைத்து நகராட்சிகளிலும் அடிப்படை வசதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்தார்.

அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு (Credits - ETV Bharat Tamil Nadu)

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் முத்தமிழறிஞர் கலைஞரின் மார்பளவு வெண்கலச் சிலை திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நேற்று (ஆக.13) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கைத்தறி (ம) துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி‌ உள்ளிட்டோர் கலைஞரின் திருவுருவ சிலையை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, முதன்மை கல்வி அலுவலக உதவியாளர் பணி ஆணை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டது.

அமைச்சர் கே.என்.நேரு பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது மேடையில் பேசிய நகர்புற அமைச்சர் கே.என்.நேரு, "கலைஞரின் திருவுருவ சிலையை திறப்பதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும். நான் ஒரு அடிமட்ட தொண்டனாக, அவரை என்றைக்கும் வணங்குகிற ஒரு நபராக இருக்கும் வாய்ப்பை தந்த இப்பகுதி மக்களுக்கும் நகர மன்ற தலைவருக்கும் நன்றி. கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் கலைஞர் பின்னால் நாங்கள் நின்று இருக்கிறோம். அவரின் செயல்களை கண்டு நாங்கள் வியந்திருக்கிறோம்.

திராவிட இயக்கம் தோன்றியது முதல் 50 ஆண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகத்தான் தொடர்ந்து இருந்து கலைஞர் இந்த கட்சியை வளர்த்து வந்திருக்கிறார். அதேபோல் மு.க.ஸ்டாலினும் 40 ஆண்டுகாலம் கலைஞர் பின்னால் நின்று பணியாற்றியதால் தான் திமுக வளர்ச்சி அடைந்து, தற்போது முதலமைச்சராக இருக்கிறார்.

தமிழக முதலமைச்சர் நகராட்சி துறைக்காக மட்டும் ஆண்டுதோறும் ரூ.24 ஆயிரம் கோடி ஒதுக்கித் தருகிறார்கள். அதனால் தான் இந்த நகராட்சிக்கு கிட்டத்தட்ட ரூ.75 கோடி வழங்கி இருக்கிறார். திருவள்ளூர் நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக முதலமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞர் தந்த ஊக்கம் தான் விவசாயியாக இருந்த நான் நான்கு முறை அமைச்சராக இருப்பதற்கு காரணம்.

சென்னையில் முதலில் கலைஞர் சிலை அமைக்கப்பட்டு, அடுத்தது காஞ்சிபுரம், ஈரோடு, திருச்சி ஆகிய பகுதிகளில் அமைத்து, தற்போது தமிழ்நாடு முழுவதும் கலைஞர் சிலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தற்போது திருச்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் கலைஞர் சிலை அமைக்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு, திருநின்றவூர், பூந்தமல்லி, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டத்துடன் கூடிய குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் தமிழக முதலமைச்சர் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்" என உறுதியளித்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர், "நகராட்சிகளைப் பொறுத்தவரை பதவிக்காலம் இன்னும் 2 ஆண்டு காலம் தான் இருக்கிறது. அதனால், நகராட்சியோடு கிராமங்களை இணைப்பதற்கான ஐஏஎஸ் தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டு, எந்த கிராமத்தை எந்த நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைவதை பொறுத்து முதலமைச்சர் உள்ளாட்சித் தேர்தலை அறிவிப்பார் என்றார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கப்போகிறாரா? என்ற கேள்விக்கு, முதலமைச்சர் நினைத்தால் யாருக்கும் எப்போதும் எது வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதுபோன்று உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராகும் தகுதி இருப்பதாகவும், எனவே அந்த பதவி அவருக்கு கொடுக்கலாம் எனவும் தொண்டர்களும்‌ ஆசைப்படுகின்றனர் என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய அவர், எந்த ஊராட்சிகளை நகராட்சியில் இணைத்தாலும் ஊராட்சி மக்களின் அனுமதியோடு தற்போது உள்ள ஊராட்சித் தலைவர்களின் பதவிக் காலம் முடியும் வரை காத்திருந்து, பின்னர் நகராட்சியில் சேர்க்கப்படும் எனவும், ஏழைகள் செய்து வரும் 100 நாள் வேலையை கெடுக்கும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லை" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: தொடர்ந்து 6வது முறையும் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றது எப்படி? இயக்குனர் காமகோடி விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.