திருச்சி: திருச்சி மாவட்டம், லால்குடியில் திமுக மத்திய மாவட்டம் சார்பில் உறுப்பினர் கூட்டம் நடந்தது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், "தற்போது தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்றால், சீமான் ஒருபுறம் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். புதிதாக கட்சி தொடங்கிய ஒருவர் நமக்கு எதிராக இருக்கிறார். அதிமுக அடுத்தது நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று சொல்கிறார்கள்.
எவ்வளவு நன்மைகள் செய்தாலும் பாமகவும் திமுகவைப் பற்றி குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். பாஜக நமக்கு எதிரியாக இருக்கிறார்கள். திமுகவிற்கு எதிரிகள் அதிகமாக இருக்கும் காலம் தான் இப்போது. நாடாளுமன்றத் தேர்தல் அமைத்த அமைப்பு போல், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் சுமூகமான அமைப்பு அமையும் சூழல் இருக்காது.
ஓபிஎஸ் ஒருமுறை சட்டமன்றத்தில் பேசும்பொழுது, 38 ஆண்டுகள் கழித்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டு முறை தொடர்ந்து ஆட்சி அமைத்தார். ஆனால், திமுக 1967, 1971க்குப் பிறகு தொடர்ந்து ஆட்சி அமைக்க முடியவில்லை. மாறி, மாறி தான் ஆட்சி அமைக்க முடிந்தது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, லால்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தெற்கு மத்திய மற்றும் வடக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, சிறப்புறையாற்றினேன்.
— K.N.NEHRU (@KN_NEHRU) September 2, 2024
இந்நிகழ்வில் மத்திய மாவட்டச்… pic.twitter.com/o0gB7MHe4n
ஆனால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் திமுக 2வது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்று மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக அமர வைக்க அனைவரும் உழைக்க வேண்டும் என பேசினார். அதிமுகவைப் பொறுத்தவரையில், யார் தலைவர் என்றே தெரியவில்லை. அதிமுகவில் குழப்பம் நீடிக்கிறது" என பேசினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய, மாவட்ட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : "ராசிமணல் திட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் துணை நிற்கும்" - செல்வப்பெருந்தகை உறுதி! - mekedatu dam issue