ETV Bharat / state

"மோடிக்கு எங்க வரலாறு தெரியாது" பொங்கி எழுந்த அமைச்சர் ஐ.பெரியசாமி! - எல்லோருக்கும் எல்லாம் பொதுக்கூட்டம்

DMK Minister I.Periyasamy: வரலாறு தெரியாமல் திமுகவை அழிப்பேன், ஒழிப்பேன் என பிரதமர் மோடி பேசி வருவதாக, திருநெல்வேலியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Minister I. Periyaswamy speech at DMK general meeting in Tirunelveli
நெல்லையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 10:38 AM IST

Updated : Mar 5, 2024, 10:54 AM IST

நெல்லையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

திருநெல்வேலி: நெல்லை மாநகர திமுக சார்பில், "எல்லோருக்கும் எல்லாம்" பொதுக்கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் ஆகியவை, பேட்டை மல்லிமார் தெருவில் மாநகர செயலாளர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் நேற்று (மார்ச் 4) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, "நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டபோது, உடனுக்குடன் அமைச்சர்களை அனுப்பி அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மத்திய அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் வெள்ள பாதிப்புகளை பார்ப்பது போல் நடித்து, மக்களுக்கு துரோகம் செய்துவிட்டனர்.

தமிழகத்திற்கு சல்லி பைசா கூட இதுவரை வெள்ள பாதிப்புக்கான நிதியாக மத்திய அரசு கொடுக்கவில்லை. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணமும், வீடு இழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதனை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்திலிருந்து ஜி.எஸ்.டி வரி வருவாய் மூலம் பல கோடி செல்கிறது. அதிகமாக வரி செலுத்தும் மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

ஆனால், தமிழகத்தின் வரி வருவாய் அனைத்தையும் மத்திய அரசு வாங்கிக் கொண்டு, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் போன்ற தவறுகளை அடுக்கடுக்காக செய்து அரசை ஏமாற்றும் மாநிலங்களுக்கு வாரி வழங்குவது நியாயமா? என்பதை மக்களே சொல்ல வேண்டும். 450 கோடி ரூபாய் நிதியை, வெள்ள பாதிப்புகளுக்காக மத்திய அரசு ஒதுக்கியது.

இது சிறு சிறு பாதிப்புகளை சரி செய்ய ஆண்டு தோறும் ஒதுக்கப்படும் நிதி மட்டுமே. வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்துவிட்டு மத்திய அரசு திருநெல்வேலி மக்களுக்கு அல்வாவை கொடுத்துவிட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ஓட்டு கூட மோடிக்குப் போடக்கூடாது. திருநெல்வேலி மக்கள் அவர்களுக்கு அல்வா கூட கொடுக்கக் கூடாது. அவர்கள் ஜீரோவாக மட்டுமே இருக்க வேண்டும்.

எவ்வளவு நிதி நெருக்கடி இருந்தாலும், ஆண்களுக்கு கல்லூரியில் படிக்க ரூ.1000 திட்டத்தை கொண்டுவர வேண்டும் என இந்த பட்ஜெட்டில் தமிழக முதலமைச்சர் நிதியை ஒதுக்கியுள்ளார். அனைத்து துறைகளிலும் சமூக நீதி திட்டங்கள் திமுக ஆட்சி காலத்தில் தான் கொண்டுவரப்பட்டது. குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 ஒரு கோடியே 18 லட்சம் பேருக்கு வழங்கி வரும் நிலையில், கூடுதலாக 10 லட்சம் மகளிருக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.

எந்த ஆட்சியிலும் இதுவரை சொன்னதை செய்ததேக் கிடையாது. ஆனால் சொன்னதையும், சொல்லாததையும் செய்து கொடுக்கும் ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான். மக்களுக்கு எல்லாம் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட தமிழக முதலமைச்சரை, செயல்பட விடாமல் நிதி ஆதாரத்தை முடக்கிவிட நினைக்கிறார்கள். கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியம், தினமும் கொடுக்கப்பட வேண்டும்.

மூன்று, நான்கு மாதங்களாக அது கொடுக்கப்படாமல் உள்ளது. தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு இனியும் வரக்கூடாது. நமக்கு வர வேண்டிய நிதியை உரிய நேரத்தில் வழங்காமல், தேர்தல் நேரத்தில் வழங்கினால் அது அவர்களுக்கு சாதகமாகும் என நினைக்கிறார்கள். புதிய கொள்கை மற்றும் லட்சியத்தால், மறைமுகமாக மதச்சார்பின்மையை மாற்ற பாஜக நினைக்கிறது.

ஜனநாயகத்தில் சர்வாதிகாரம் தலைதூக்கக் கூடாது. நமக்கான உரிமைகளை மத்திய அரசு பறிக்கும்போது, நாம் வாழாவெட்டியாக இருக்க முடியாது. ஆகையால், நமக்கான உரிமைகளைப் பெற்றிட வேண்டும். திமுகவை அழிப்போம், ஒழிப்போம் என பிரதமர் மோடி வரலாறு தெரியாமல் பேசுகிறார். பிரதமர் வந்து 10 ஆண்டுகள் தான் ஆகிறது. திமுகவிற்கு தனி வரலாறு உள்ளது. எமர்ஜென்சி காலத்தில் 500 திமுகவினரை சிறையில் அடைத்தால், திமுக அழியும் என நினைத்தார்கள்.

திமுக என்றும் மக்கள் மனதில் உள்ளது. திமுகவை அழிக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது. அரசியல் கொள்கைகளை அடிப்படையாக வைத்து திமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. ஜாதி, மதம் இவற்றையெல்லாம் வைத்து சந்தர்ப்பவாத கூட்டணியை எதிர் தரப்பினர் அமைத்துள்ளனர். அதனால் தான் அவர்களது கூட்டணிக்கு யாரும் செல்லவில்லை" எனத் தெரிவித்தார்.

இதயும் படிங்க: சாந்தனின் உடல் இலங்கையில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நல்லடக்கம்..கதறி அழுதத் தாய்..!

Last Updated : Mar 5, 2024, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.