ETV Bharat / state

வங்கதேச கலவரத்தில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் 49 பேர் மீட்பு- அமைச்சர் செஞ்சி மஸ்தான்! - 49 Students Rescued in Bangladesh

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 22, 2024, 9:09 AM IST

TN Students Return to State from Bangladesh: வங்கதேசத்தில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் 49 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, இரண்டு விமானங்களில் கவுகாத்தியில் இருந்து சென்னை வந்தடைந்தனர். பின்னர், அரசு செலவில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வங்கதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள்
வங்கதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக உயர் கல்விக்காக வங்கதேசம் சென்றிருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ மாணவிகள் அங்கு சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில், தமிழர் நலன் மற்றும் அயல் நாடுகளில் வாழும் தமிழர்களின் மறுவாழ்வு ஆணையரகம், வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டது.

அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் வங்கதேச கலவரத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதற்காக சிறப்பு வாட்ஸ் அப் குழு ஒன்று உருவாக்கப்பட்டு அந்த குழுக்கள் மூலம், வங்கதேசத்தில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்து, முதற்கட்டமாக 49 மாணவ மாணவிகள் வங்கதேசத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர், அங்கிருந்து இந்தியாவின் அசாம் மாநிலம் கவுகாத்தி நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, கவுகாத்தி நகரில் இருந்து நேற்று இரவு 8 மணிக்கு சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் 18 பேரும், இரவு 9.30 மணிக்கு சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானத்தில் 21 பேரும் என மொத்தம் 49 மாணவ மாணவிகள் சென்னை வந்து சேர்ந்தனர். அப்படி, சென்னை வந்தடைந்த மாணவ மாணவிகளை தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், மாணவர்கள் அனைவரும் அவரவர்கள் ஊர்களுக்கு தமிழ்நாடு அரசின் செலவில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாணவர்களின் விவரம்:

  • கிருஷ்ணகிரி - 12
  • கடலூர் - 6
  • தருமபுரி - 5
  • தஞ்சாவூர் - 5
  • சேலம் - 3
  • வேலூர் - 2
  • ராணிப்பேட்டை - 2
  • மதுரை - 2
  • சென்னை - 2
  • விருதுநகர் - 2
  • ஈரோடு - 1
  • திருவள்ளூர் - 1
  • விழுப்புரம் - 1
  • தென்காசி - 1
  • திருவண்ணாமலை - 1
  • தூத்துக்குடி - 1
  • காஞ்சிபுரம் - 1
  • மயிலாடுதுறை - 1 என மொத்தம் 49 பேர்.

முன்னதாக செய்தியாளரைச் சந்தித்து பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், "வங்கதேசத்தில் பதற்றமான சூல்நிலை நிலவி வருவதால், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வங்கதேசம் சென்ற மாணவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் மீட்கும் பணி நடந்து வருகிறது, அந்த வகையில், தற்போது முதற்கட்டமாக 49 மாணவர்கள் பத்திரமாக தற்போது தமிழகம் வந்துள்ளனர்.

இரண்டாம் கட்டமாக 77 மாணவர்கள் தமிழ்நாடு வர விருப்பம் தெரிவித்துள்ளார்கள். மேலும், அங்குள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக கட்டணம் இல்லாத தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு உணவு கிடைக்காத மாணவர்களுக்கு உணவு கிடைக்கவும் துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் அங்கு பயின்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. முதலில் அங்கு இருக்கக்கூடிய மாணவர்களை மீட்டு, தமிழ்நாடு அரசு விமான முதல் வீடு வரை கட்டணம் ஏதுமின்றி இல்லம் வரை சென்று விடும் பணி நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.

சென்னை திரும்பிய மாணவிகள் கூறியதாவது, "அங்கு நாங்கள் நிறைய சிரமங்கள் சந்தித்தோம். உணவு, இணைய வசதி இல்லாமல் இருந்தோம். பிறகு தமிழக அரசால் தற்போது இங்கு பாதுகாப்பாக வந்து உள்ளோம். மேலும், வங்கதேசத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால், எங்களால் வெளியே கூட செல்ல முடியவில்லை. ஆனால், தமிழகம் மற்றும் இந்திய மாணவர்கள் யாரும் அங்கு தாக்கப்படவில்லை" எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, மதுரையைச் சேர்ந்த சஞ்சய் கிருஷ்ணா என்ற மாணவர் பேசுகையில், "தமிழக மாணவர்கள் நிறைய பேர் அங்குள்ளார்கள். நாங்கள் எல்லையில் இருந்ததால் முதலில் வந்து விட்டோம். இன்னும் நிறைய பேர் அங்கு உள்ளனர். மேலும், அங்கு இணைய வசதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல் மீண்டும் நடக்காது என்று அந்நாட்டு அரசு சொல்லும் வரை நாங்கள் அங்கு செல்ல மாட்டோம். மேலும், மாணவர்கள் வைத்திருந்த வாட்ஸ்அப் குழு தான் எங்களுக்கு உதவியாக இருந்தது. அதன் மூலம் தான் தகவல் திரட்டினோம்" எனத் தெரிவித்தார்.

கலவரத்தின் பின்னணி: வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருவதால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இருதரப்புக்கும் இடையிலான மோதலில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், போராட்டத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் இணைய சேவைகள் தடை செய்யப்பட்டு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வங்கதேசத்தின் ஆளுங்கட்சி நாடு முழுவதும் கடந்த ஜூலை 19ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, நாட்டில் அமைதியை நிலைநாட்ட ராணுவத்துக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: “49 தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை” - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பிரத்யேக தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.