ETV Bharat / state

நான் பயப்பட மாட்டேன்.. ஜெயில் ஒன்றும் எனக்கு புதிதல்ல.. வைரலாகும் அமைச்சர் துரைமுருகனின் சர்ச்சைக்குரிய பேச்சு..!

Minister Duraimurugan: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூபாய் 1 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி கட்டங்களை அமைச்சர் துரைமுருகன் திறந்துவைத்தார்.

Minister Duraimurugan
அமைச்சர் துரைமுருகன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 11:06 PM IST

அமைச்சர் துரைமுருகன்

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏகாம்பரனல்லூர், கொண்டகுப்பம், வசூர், நெல்லிகுப்பம், அக்ராவாரம் ஆகிய பகுதிகளில் ரூபாய் 1 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி கட்டிடங்கள் திறக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் இன்று(பிப்.17) நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து அக்ராவாரம் பகுதியில் பள்ளிக் கட்டிடம் திறப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "நீர் பிடிப்பு பகுதிகளில் கட்டிடம் கட்டக் கூடாதுதான். ஆனால் ஒரு காலகட்டத்தில் நீர் பிடிப்பு பகுதியில் தான் கட்டிடங்கள் கட்டப்பட்டது.

அப்போது நான் தான் மந்திரியாக இருந்தேன். ஒரு நாள் நானும், பொன்முடியும் விழுப்புரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இங்கு இவ்வளவு பெரிய ஏறி இருக்கே என்ன பண்ண போறேன்னு கேட்டேன். கலெக்டர் ஆபீஸ் கட்ட போறேன்னு சொன்னாரு. எடுத்துக்கோனு சொன்னேன். அங்கு கலெக்டர் ஆபிஸ் கட்டப்பட்டது.

அதேப்போல் மதுரை கோர்ட் கட்டிடம் கட்டுவதற்கு நான்தான் அனுமதி கொடுத்தேன். அதன்பின் நீர் பிடிப்பு பகுதியில் கட்டிடம் கட்டினால் ஜெயில்ல போட்டு விடுவோம் என்று சொன்னதனால் அதிகாரிகள் அனுமதி கொடுப்பதில்லை.

அவங்க பயப்படுவாங்க. ஆனால், நான் பயப்பட மாட்டேன். ஜெயில் ஒன்றும் எனக்கு புதிதல்ல. அது கெஸ்ட் ஹவுஸ்க்கு போயிட்டு வர மாதிரி" என அமைச்சர் துரைமுருகன் பேசியது தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் பெண் குழந்தை கடத்தல்.. 24 மணிநேரத்தில் 3 பேரை பிடித்த காவல்துறையினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.