வேலூர் : வேலூர் மாவட்டம், காட்பாடியில் வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை சார்பில், ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் வணிக பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள 24 புதிய கடைகளை, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று(செப் 20) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக கூட்டுறவு சங்கங்கள், உள்ளாட்சிகள் போன்ற அமைப்புகள் உள்ளது. இந்த அமைப்புகளுக்கு திட்டத்தை உருவாக்கி அதற்கான நிதியை அரசு வழங்குகிறது.
இதையும் படிங்க : பெட்ரோல் பங்க் லாக்கரில் தொடர் திருட்டு.. ரூ.2 லட்சத்தை அபேஸ் செய்த ஊழியர்! - Aruppukottai Petrol Bulk theft
ஆனால் சில அதிகாரிகள் அதில் முறைகேடுகளில் ஈடுபடும் பொழுது, அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வேண்டும். வேலூர் மாநகராட்சியில் சாலைகள் போடும்பொழுது அதனை முறையாக முடிக்கப்படாமல் பணிகள் முடிக்கும் முன்பே அதனை திறக்க கூடாது என கூறினார்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாலாற்றின் குறுக்கே காங்கேயநல்லூரில் இருந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பாலம் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் காட்பாடி - வேலூர் சாலையில் போக்குவரத்து நெரிசலும் குறையும். காந்தி நகரில் 2 வடிகால்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி இந்த பிரச்னையும் இருக்காது" என தெரிவித்தார்.