ETV Bharat / state

உதயநிதி துணை முதலமைச்சர் விவகாரம்: ஆவேசமாக எழுந்து ஓடிய அமைச்சர் துரைமுருகன்.. வேலூரில் நடந்தது என்ன? - DURAIMURUGAN ON Udhayanidhi Stalin - DURAIMURUGAN ON UDHAYANIDHI STALIN

வேலூர் மாவட்டத்தில் இன்று பொன்னை ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணையை திறந்த வைத்த அமைச்சர் துரைமுருகனிடம் அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்காமல் ஆவேசமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2024, 6:36 PM IST

வேலூர்: காட்பாடி அருகே குகைநல்லூர் என்ற இடத்தில் பொன்னை ஆற்றின் குறுக்கே புதிதாக ரூ.12 கோடி 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "தமிழகத்திலேயே வேலூர் மாவட்டத்தில் தான் அதிகமான தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. மக்களுக்களுக்காக அரசு பல திட்டங்களை கொண்டு வந்து அவற்றுக்கான பொருட்களை உருவாக்கி தருகிறது. அவற்றை மக்கள் பாதுகாக்க வேண்டும். மாயனூரில் முதன்முதலாக அணை கட்டப்பட்டது. அதன் பிறகு அப்பகுதியில் வேளாண் பயிர்கள் செழித்து வருகிறது. அதைப் போலவே தற்பொழுது பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் பலனையும் மக்கள் பயன்படுத்தும் போதுதான் தெரியும்" என்றார்

அமைச்சர் துரைமுருகன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

தொடர்ந்து பேசிய அவர், "இந்த அணையானது, 750 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டுள்ளது. மழை வெள்ளம் வரும்போது ஐந்து அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் சுமார் 716 ஏக்கர் தினங்கள் பாசன வசதி பெறும். தற்பொழுது கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் நேற்று இரவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தடுப்பனையில் தண்ணியை தேக்கி வைக்க நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன்"

இதையும் படிங்க: காங்கேயநல்லூர் டூ வேலூர் கலெக்டர் அலுவலகம்; மேம்பாலம் திறப்பு எப்போது? - அமைச்சர் துரைமுருகன் கொடுத்த அப்டேட்!

ஆனால் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே அணையைத் திறந்து தண்ணீரை வெளியேற்றிய சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வரும் 15 நாட்களுக்குள் அவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள். தடுப்பணைகள் மக்களுடைய வரிப்பணத்தில் கட்டப்பட்டு வருகிறது. பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் என்பது பேச்சுவார்த்தைக்கு அல்ல சட்டத்தின் மூலம் பயம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் குற்றங்கள் தடுக்க முடியும்" எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், "கட்டப்பட்டிருக்கும் அணை பலமாக இருக்கும் என்று நம்புகிறேன். இருந்தாலும் வெள்ளம் வரும்போதுதான் இதனுடைய உறுதித் தன்மை தெரியவரும். அதிகம் வெள்ளம் வந்து தடுப்பணையில் சேதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள்
சிறைக்கு செல்வார்கள்" என எச்சரிக்கை விடுத்தார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, "இந்த கேள்வி வேண்டாம்" என ஆவேசமாக கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.