ETV Bharat / state

சத் பூஜை திருநாள்: ஆளுநர் இந்தி வாழ்த்து விவகாரம்; அமைச்சர் துரைமுருகனின் நச் பதில்! - TN GOVERNOR RN RAVI

ஆளுநர் மாளிகை சத் பூஜை திருநாளுக்கு இந்தியில் வாழ்த்து தெரிவித்திருந்தது குறித்து கேட்டதற்கு, அவர் தான் யார் என்பதை இதன் மூலம் நிருபித்துக் கொண்டிருக்கிறார் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஆர் என் ரவி, துரைமுருகன்
ஆர் என் ரவி, துரைமுருகன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2024, 4:30 PM IST

வேலூர் : ஆளுநர் மாளிகை சத் பூஜை திருநாளுக்கு இந்தியில் வாழ்த்து தெரிவித்திருந்தது குறித்து கேட்டதற்கு, அவர் தான் யார் என்பதை இதன் மூலம் நிருபித்துக் கொண்டிருக்கிறார் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், வள்ளி மலையில் இன்று( நவ 7) மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சுமார் 798 நபர்களுக்கு மொத்தம் பத்து கோடியே 91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "கடந்த காலங்களில் மக்கள் அதிகாரிகளை சந்தித்து தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி வந்தனர். ஆனால் தற்போது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால், மக்களை தேடி அரசு அதிகாரிகள் நேரடியாக சென்று, மக்களிடம் மனுக்களை பெற்று நல திட்ட உதவிகளை அளித்து வருகின்றனர்.

அமைச்சர் துரைமுருகன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பாலாற்றின் குறுக்கே 10 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. சேர்க்காடு பகுதியில் பல்நோக்கு அரசு மருத்துவமனை விரைவில் திறக்கப்படும். படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வள்ளிமலை அருகே சிப்காட் தொழில்பேட்டை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்திற்கு இந்த நிதி ஆண்டில் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறும்.

காட்பாடி ரயில் நிலையம் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மேலும் ஒரு மேம்பாலம் கூடுதலாக அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்படும். காட்பாடி தொகுதியில் கூடுதலான பள்ளி கட்டடங்கள் தேவை என்று தெரிவித்தால் உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் படிங்க : அரசியல் காரணங்களுக்காக ஜாதி, மதம், மொழி, இனம் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிறார்கள்...ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

என் கட்டை கீழே விழுகிற வரை காட்பாடி தொகுதிக்காக பாடுபடுவேன். மற்ற தொகுதியை ஒப்பிட்டு பாருங்கள் நான் செய்த செயல்கள் தெரியும். தமிழக சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் 56 ஆண்டுகள் இருந்தார். அதற்கு பிறகு நான் தான் 53 ஆண்டுகளாக உள்ளேன். தொகுதியை நான் கோயிலாகப் பார்ப்பதால் மக்கள் என்னை வெற்றி பெற வைக்கிறார்கள். எனக்கு உள்ள சீனியாரிட்டி, தலைவரிடத்தில் எனக்கு உள்ள நெருக்கம் காரணமாக இவற்றை செய்து வருகிறேன்.

இந்த டிவி, ரேடியோ காரங்க மழை வருது மழைவருதுனு சொல்லிடுராங்க. முதல்வர் உடனே எங்களை ஆய்வுக்கு போக சொல்கிறார். இன்றும் எனக்கு பருவமழை தொடர்பாக ஆய்வு இருந்தது. ஆனாலும், உங்களை பார்க்கவே வந்துள்ளேன்," என்றார். பின்னர் அவரிடம் செய்தியாளர்கள் ஆளுநர் மாளிகை சத் பூஜை திருநாளுக்கு இந்தியில் வாழ்த்து தெரிவித்திருந்தது குறித்து கேட்டதற்கு, "அவர் தான் யார் என்பதை இதன் மூலம் நிருபித்துக் கொண்டிருக்கிறார்" என கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.