சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் பள்ளிகள், நூலகங்களை ஆய்வு செய்த அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத் தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 234/77 என்ற ஆய்வு பயணத்தைத் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி தொடங்கினார்.
ஒவ்வாெரு சட்டமன்றத் தொகுதிக்கும் செல்லும் போது பள்ளிகள், நூலகம், பள்ளிக்கல்வித் துறையின் அலுவலகங்களில் 77 கேள்விகள் அடங்கிய படிவத்தில் ஆய்வினை செய்தார். பள்ளிகளில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் பயணித்து 2024 நவம்பர் 14 தமிழ்நாடு முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் ஆய்வை நிறைவு செய்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வாழ்த்துகளோடு, 2022 அக்டோபர் 10-ஆம் நாளில் மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 234/77 ஆய்வு பயணத்தைத் தொடங்கினோம். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் பயணித்து… pic.twitter.com/MshcPbD6uc
— Anbil Mahesh (@Anbil_Mahesh) November 27, 2024
இதையும் படிங்க : "மாவீரம் போற்றுதும்" நவம்பர் 27 ல் விஜயின் பதிவு
இதற்கான நிறைவு அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி உள்ளார். இந்த ஆய்வு அறிக்கையில் பள்ளிக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானம், ஆசிரியர்கள் எண்ணிக்கை, ஆசிரியர்களின் கோரிக்கை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்