ETV Bharat / state

"ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையில் அரசியல் செய்பவர்கள் நாங்கள் அல்ல" - விஜயை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர்!

ஒரு சிலரைப்போல வீட்டில் அமர்ந்து கொண்டு, ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையில் அரசியல் செய்பவர்கள் நாம் அல்ல, களத்தில் இறங்கி செயல்படுபவர்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சூசகமாக விஜயை விமர்சித்துள்ளார்.

work from home politics
அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் விஜய் (Credits - ETV Bharat Tamil Nadu and TVK Party Updates 'X' Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

திருச்சிராப்பள்ளி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக மண்டல தொழில் நுட்ப அணி ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் இன்று (டிச.12) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா தலைமை தாங்கினர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேடையில் பேசியபோது, "நாம் செய்யும் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது சாதாரணமானது அல்ல. ஆகையால், சமூக வலைதளங்களில் நம்மைப் பற்றி விமர்சனங்கள் பரவும் போது, அதை நாம் திசை மாற்ற வேண்டும். நாம் செய்த திட்டங்களை பரப்ப வேண்டும்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பேச்சு (Credit - ETV Bharat Tamil Nadu)

குறிப்பாக தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர், நம்மைப் பற்றி குறை கூறும் போது, உடனே சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் எழுந்து உங்கள் ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்று பேசினால், அவர்கள் அமைதியாக அமர்ந்து விடுவார்கள். அதேபோல், நீங்கள் சமூக வலைதளங்களில் நம்மைப் பற்றி விமர்சனங்களை பரப்புவோர்கள் அனைவரையும் திசை திருப்ப வேண்டும்.

இதையும் படிங்க: 'விஜய் என்ன வாழும் அம்பேத்கரா..? இது ராமசாமி பூமி' - அமைச்சர் கோவி.செழியன் விமர்சனம்!

வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான பணிகளை நீங்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டின் இளம் வாக்காளர்கள், முதல் வாக்காளர்களை நாம் அணுகி வாக்குகள் சேகரிக்க வேண்டும்.

அதே சமயம், தற்போது உள்ள ஒரு சிலரைப்போல வீட்டில் அமர்ந்து கொண்டு ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையில் அரசியல் செய்பவர்கள் போன்று நாம் அல்ல, களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக செயல்பட்டு வெற்றியை நிச்சயம் பெறுவோம்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.