ETV Bharat / state

ஏடிஎம் மையத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி.. கனமழையின் நடுவே சோகம் - CHENNAI ATM SHOCK DEATH

கனமழை காரணமாக சென்னை மண்ணடி பிரகாசம் சாலை முத்தியால்பேட்டையில் ஏடிஎம் மையத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

ஏடிஎம், கோப்புப் படம்
ஏடிஎம், கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2024, 5:16 PM IST

சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று முதல் சென்னையில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பள்ளம் மேடு தெரியாமல் விபத்து ஏற்படுத்தும் ஆபத்தான வகையில் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

மேலும் தொடர் கனமழை காரணமாக சென்னை பாரிமுனை, இராயபுரம், வியாசர்பாடி, புளியந்தோப்பு, திருவெற்றியூர், எண்ணூர், உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் மண்ணடி பிரகாசம் சாலை முத்தியால்பேட்டையில் சாலைகள் நிரம்பியவாறு குளம் போல் காட்சியளிக்கின்றனர்.

இந்நிலையில் இங்குள்ள மலையப்பன் தெருவில் வசித்து வரும் கூலி தொழிலாளி இளைஞர் சந்தன் (20). இவர் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவராவர். இவர் இன்று (நவம்பர்.30) நீர் சூழ்ந்த பிரகாசம் சாலையில் உள்ள தண்ணீரில் நடந்து, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார்.

இதையும் படிங்க: "ஃபெஞ்சல் புயல் இப்போது மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது?" - வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் சொல்லும் புதிய தகவல்!

அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்ததையடுத்து அப்பகுதி மக்கள் தண்ணீர் விழுந்த சந்தனை அருகில் இருந்த அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்தாக கூறியுள்ளனர். இதையடுத்து, முத்தியால்பேட்டை காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து முத்தியால்பேட்டை காவல் துறையினர் கூறுகையில், “ஏடிஎம்-ல் ( ATM ) இருந்த இரும்பு கம்பியை கையால் பிடித்த போது மின்சாரம் தாக்கி கிழே விழுந்துள்ளதாக தெரிகிறது” எனக் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.