ETV Bharat / state

அரசுப் பணி தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் கராத்தே? - சென்னை ஐகோர்ட் முடிவென்ன? - KARATE IN SPORTS QUOTA

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் கராத்தே விளையாட்டையும் சேர்ப்பது குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கராத்தே மற்றும் சென்னை ஐகோர்ட் கோப்புப்படம்
கராத்தே மற்றும் சென்னை ஐகோர்ட் கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் கராத்தே விளையாட்டையும் சேர்ப்பது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அரசுப் பணிகளுக்கான தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சிலம்பம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து, கபடி, மல்யுத்தம், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக், ஜூடோ, பளு தூக்குதல், தடகள விளையாட்டுக்கள், துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் மட்டும் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற முடியும்.

இந்நிலையில், விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் கராத்தே விளையாட்டையும் சேர்க்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஆவடியை சேர்ந்த கராத்தே சாம்பியன் அருண் பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிங்க: கோவில்பட்டி சிறுவன் மரண வழக்கில் ஆறு நாட்களாக நீடிக்கும் மர்மம்.. உறவினர்கள் சாலை மறியல்..!

அந்த மனுவில், கராத்தே விளையாட்டை விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்க கோரி அரசுக்கு பல மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜூடோ போன்ற விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கராத்தே உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர் ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, '' விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கராத்தே விளையாட்டை சேர்ப்பது குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும் எனவும், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.