ETV Bharat / state

சமரச ஒப்பந்தத்தில் கையெழுத்து; ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு! - signing conciliation agreement - SIGNING CONCILIATION AGREEMENT

Signing Conciliation Agreement Issue: கட்டாயப்படுத்தி சமரச ஒப்பந்தத்தில் கையொப்பம் பெற்ற ஆய்வாளருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை பரிசீலித்து முடிவெடுக்க தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 20, 2024, 10:52 PM IST

சென்னை: அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 கோடியே 50 லட்சம் மோசடி செய்ததாக நித்யானந்தம் என்பவர் மீது ராமதாஸ் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளராக இருந்த அனிதா ஆரோக்கிய மேரி, புகார்தாரரான ராமதாஸ் தயாரித்துக் கொடுத்த சமரச ஒப்பந்தத்தில் தன்னைக் கட்டாயப்படுத்தி கையெழுத்திடச் செய்ததாக நித்யானந்தம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை அமர்வு, சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்ததுடன் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஆய்வாளருக்கு எதிராக வெறும் கண்டனம் மட்டும் பிறப்பிக்கப்பட்டதாகவும், அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கடும் தண்டனை வழங்கக் கோரி டிஜிபிக்கு அளித்த மனுவை பரிசீலிக்க கோரி நித்தியானந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நித்தியானந்தத்தின் மனுவை பரிசீலித்து 8 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : குண்டாஸ்-க்கு பதில் மாற்று வழிகள் குறித்து ஆராய சென்னை ஐகோர்ட் அறுவுறுத்தல்! - Goondas Act

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.