ETV Bharat / state

+2 பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதினாலும் இட ஒதுக்கீடு பெற உரிமை உண்டு - ஐகோர்ட் உத்தரவு! - Tamil Medium Education Reservation - TAMIL MEDIUM EDUCATION RESERVATION

Tamil Medium Education Reservation issue: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதியவருக்கு தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பெற உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2024, 9:27 AM IST

சென்னை: சத்தியா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு 5,413 குரூப் 2 மற்றும் 2A பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவிப்பு வெளியிட்டது.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்த சத்தியா என்பவர், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் தனது பெயரையும் சேர்க்கக் கோரியிருந்தார். ஆனால், அவர் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதியதால், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் சேர்க்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கானது நீதிபதி இளந்திரையன் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் 11ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பள்ளியில் படித்த போதும், குடும்பச் சூழல் காரணமாக 12ஆம் வகுப்புத் பொதுத்தேர்வை தனித்தேர்வராகத் தமிழ் வழியில் எழுதியிருக்கிறார்.

இதையும் படிங்க: 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மத்திய அரசு தேர்வு: தமிழக அரசுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழும் பெற்றிருக்கிறார் என்பதால், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பெற அவருக்குத் தகுதி உள்ளது என உத்தரவிட்டார். மேலும், ஏற்கனவே திருப்பூரில் ஊரக வளர்ச்சித் துறை உதவியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு நியமன உத்தரவு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.