ETV Bharat / state

"வழக்கறிஞர்கள் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டும்" - ஐகோர்ட் நீதிபதி அறிவுறுத்தல்! - MHC judge advice of junior lawyers - MHC JUDGE ADVICE OF JUNIOR LAWYERS

Madras High Court: வழக்குகளில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வர வழக்கறிஞர்கள், நேர்மையாகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 9, 2024, 4:20 PM IST

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு அரசின் சட்டத் துறை மற்றும் மெட்ராஸ் பார் அசோசியேஷன் இணைந்து நடத்தும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான 3 நாட்கள் பயிலரங்கத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு அரசின் சட்டத் துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் பாஸ்கரன், சட்டக் கல்வி இயக்குனர் பேராசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய நீதிபதி,"வழக்காடுவது என்பது ஒரு கலை. அதை. அனைத்து இளம் வழக்கறிஞர்களும் உருவாக்கி கொள்ள வேண்டும். வழக்கறிஞராக நான் பணியை தொடங்கிய ோது, ஆங்கிலத்தில் நீதிமன்றத்தில் பேச தயங்கமும், அச்சமும் இருந்தது. ஆனால் தற்போது அதையெல்லாம் சரி செய்ததால் தான் நீதிபதியாக உள்ளேன்.

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தையும், கூர்ந்து கவனிப்பதையும் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். வழக்கை நீதிமன்றத்தில் நடத்தும் முன், வழக்குகளை எளிமையாக விளக்க கதை போல் சொல்லும் திறமையை வளர்த்துக் கொள்ளவும், தெளிவான வாதத்தை வைக்கும் வகையில் தயார்படுத்தி கொள்ள வேண்டும்.

நீதிமன்ற விசாரணையின்போது நீதிபதிகளின் கேள்விக்கு உகந்த பதில்களை வழங்கினாலே வழக்கில் விரைந்து தீர்வு காண முடியும். மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில், வழக்கறிஞர்கள் வழக்குகளில் நேர்மையுடன், வெளிப்படைதன்மையுடனும் உண்மைகளை தேட வேண்டும். வழக்குகளில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வர வழக்கறிஞர்கள், நேர்மையாகவும் அர்பணிப்புடன் செயல்பட வேண்டும்" என நரசிம்ம கடவுளின் கதையை சுட்டிக்காட்டி நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: 'இதற்கு தானே சுதந்திரம் பெற்றோம்'.. மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? - நீதிபதிகள் சரமாரி கேள்வி! - Savukku sankar case

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.