ETV Bharat / state

வங்கதேச இந்துக்கள் மீது தாக்குதல்: இந்து முன்னணி அமைப்பு போராட்டம் நடத்த அனுமதி அளிக்க நீதிமன்றம் ஆணை - Madras High court

MADRAS HIGH COURT: வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் போரட்டம் நடத்த அனுமதி கோரிய இந்து முன்னணி அமைப்பின் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்(கோப்புப் படம்)
சென்னை உயர் நீதிமன்றம்(கோப்புப் படம்) (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 16, 2024, 7:02 PM IST

சென்னை: வங்கதேசத்தில் இந்துக்கள் இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கு காவல்துறையிடம் அனுமதி கோரியதாகவும், ஆனால் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதாகக் கூறி, சென்னை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சிவா விஜயன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், போராட்டத்திற்கு அனுமதி கோரி மீண்டும் மனு அளிக்குமாறு இந்து முன்னணி அமைப்புக்கு அறிவுறுத்தினார். அவ்வாறு அளிக்கப்படும் மனுவை பரிசீலித்து அனுமதி அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும், எந்தெந்த இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டது? எந்தெந்த இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டது? என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: உரிமையாளரை வெட்டிவிட்டு நகைகள் கொள்ளை.. ஆவடி அருகே துணிகரம்.. போலீஸ் தீவிர விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.