ETV Bharat / state

தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தி அளித்துள்ளது - சென்னை உயர் நீதிமன்றம்..

Actions of Tamil Language development: உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாகத் தெரிவித்து, மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை என வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 5:29 PM IST

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் சி.கனகராஜ் தாக்கல் செய்திருந்த மனுவில், உயர் நீதிமன்றம் உள்ளிட்ட கீழமை நீதிமன்ற தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்க உத்தரவிட வேண்டும். தமிழ் மொழி மேம்பாடு குறித்து ஆய்வுகள் நடத்த அறிஞர்கள் அடங்கிய நிரந்தர குழுவை அமைக்க வேண்டும். அரேபிய எண் முறைக்குப் பதில் தமிழ் எண் முறையை அமல்படுத்த வேண்டும்.

அரசாணைகளைத் தமிழில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருந்தார். இந்த வழக்கு முதன்மை அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழக அரசு பல திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருவதாகவும், தமிழ் ஆண்டு, தமிழ் மாதம் இவற்றைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தது.

மேலும் தமிழ் ஆராய்ச்சிக்காக உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் 2013ஆம் ஆண்டு 50 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், அதன் பிறகும் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வகுப்புகள் நடத்தப்படுவது, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது, கீழமை நீதிமன்றங்களில் சாட்சியங்களைத் தமிழில் பதிவு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டது போன்றவற்றையும் சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழ் ஆராய்ச்சிக்கென 1971ஆம் ஆண்டிலேயே தமிழ் மொழி வளர்ச்சி இயக்குநரகம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள், நிதி உதவிகள் வழங்கப்படுவதாகவும், தமிழ் வளர்ச்சித் துறையில் 2019-2020ஆம் ஆண்டில், 70 கோடியே 91 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதில் 65 கோடியே 48 லட்ச ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாகவும், 2020-2021ஆம் ஆண்டில் 63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதில் 53 கோடியே 86 லட்ச ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் திருப்தி தெரிவித்து, இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை என வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பீடு; தமிழக அரசு உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.