சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த பதில் மனுவில் உள்ள ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்கக் கோரி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளார்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு தற்போது அதிமுக பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் மேத்யூ சாமுவேல் பதில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
அந்த பதில் மனுவில் மேத்யூ சாமுவேல் தவறான கருத்துகளை கூறியிருப்பதாகவும், அதனை நீக்க வேண்டுமெனவும் எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு நீதிபதி என். சதீஷ்குமார் விசாரணைக்கு வந்த போது, எடப்பாடி பழனிசாமி மனு குறித்து மேத்யூ சாமுவேல் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: திமுக எம்எல்ஏ மகன் பணிப்பெண்ணை கொடுமை செய்த வழக்கு: சென்னை முதன்மை அமர்வுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!