சென்னை: சொத்துக் குவிப்பு வழக்குகளிலிருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்த தீர்ப்புகளை மறு ஆய்வு செய்யும் வகையில், நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்திருந்தார்.
இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் வாதத்துக்காக வழக்கு இன்று (ஏப்.30) தள்ளிவைக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 36வது முறையாக நீட்டிப்பு! - EX Minister Senthil Balaji Case