ETV Bharat / state

சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ பணி: ஓட்டேரி வந்தடைந்த 'ஆனைமலை' இயந்திரம்! - CHENNAI METRO CONSTRUCTION UPDATE

CHENNAI PHASE 2 METRO CONSTRUCTION: சென்னை 2-ம் கட்ட மெட்ரோ இரயில் கட்டுமான பணியில் பயன்படுத்தப்பட்ட 'ஆனைமலை' என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து ஓட்டேரி நிலையத்தை வந்தடைந்ததுள்ளது.

சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள்
சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் (PHOTO CREDITS- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 10:06 PM IST

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ இரயில் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த மெட்ரோ இரயில் திட்டம் 116.1 கி.மீ நீளத்திற்கு, 3 வழித்தடங்கள் கொண்டது. இதன் கட்டுமான பணிகள் 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த 2-ஆம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்தில் சுரங்கப்பாதை பணிகளுக்காக மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தொடரும் கட்டுமான பணிகள்: இந்நிலையில் இந்த கட்டுமானப்பணிகள் 2ஆம் கட்டத்தில் ஆனைமலை எனப் பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து ஓட்டேரி நிலையத்தை வந்தடைந்ததுள்ளது. ​வழித்தடம் 3-ல் மாதவரம் பால் பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்குச் சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இதனையடுத்து சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஆனைமலை (S98) வழித்தடம் 3இல் (down line) கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி அயனாவரம் நிலையத்திலிருந்து 925 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு ஓட்டேரி நிலையத்திற்குச் சுரங்கம் தோண்டும் பணிக்கு வந்தடைந்தது.

கட்டுமானப் பணியும் மேற்பார்வையும்: ​மாதவரம் முதல் சிறுசேரி வரை (45.4 கி.மீ) 3வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4வது வழித்தடத்திலும் மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள் மற்றும் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.

இதையும் படிங்க: தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள்.. தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.