ETV Bharat / state

அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்! - temperature increase in TN - TEMPERATURE INCREASE IN TN

TN Weather Update: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரமாக பெய்த நிலையில், புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு குறைந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 4:32 PM IST

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

குழித்துறை (கன்னியாகுமரி) 5 செ.மீ மழையும், வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 3 செ.மீ மழையும், மண்டலம் 06 குளத்தூர் (சென்னை), மண்டலம் 06 டிவிகே நகர் (சென்னை), மண்டலம் 08 மலர் காலனி (சென்னை) 2செ.மீ மழையும், குளச்சல் (கன்னியாகுமரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), அடையாமடை (கன்னியாகுமரி), பெரம்பூர் (சென்னை), சிவலோகம் (கன்னியாகுமரி), மண்டலம் 05 ராயபுரம் (சென்னை மாவட்ம்), மண்டலம் 03 மாதவரம் (சென்னை), மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை மாட்டம்) 1 செ.மீ மழையும் பெய்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை விட குறைவாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 38.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 29 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ் மற்றும் தென் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 32 டிகிரி முதல் 35 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 29 டிகிரி முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 17 டிகிரி முதல் 24 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 38.0 டிகிரி செல்சியஸ் (-0.9 டிகிரி செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 37.0 டிகிரி செல்சியஸ் (-1.0 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: நேற்று காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து, வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று மாலை 5:30 மணி அளவில் ‘ரீமல்’ புயலாக வலுப்பெற்று, இன்று காலை 5:30 மணி அளவில் “தீவிர புயலாக” வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

இன்று காலை 8:30 மணி அளவில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில், வங்கதேச-கேப்புப்பாராவிற்கு, தெற்கு-தென்மேற்கே சுமார் 260 கி.மீ தொலைவிலும், வங்கதேச-மங்லாவிற்கு, தெற்கே சுமார் 310 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்காளம்- சாகர் தீவிற்கு, தெற்கு-தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மேலும், வடக்கு திசையில் நகர்ந்து, இன்று நள்ளிரவு, வங்க தேச – கேப்புப்பாராவிற்கும், மேற்கு வங்காளம் - சாகர்தீவிற்கும் இடையே, வங்கதேச-மங்லாவிற்கு அருகில் கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இதனால், இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 28 முதல் 30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 31 மற்றும் ஜூன் 1 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: இன்று முதல் மே 30 வரை, அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பாகவும், இயல்பை விட சற்று குறையக்கூடும்.

நாளை திகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். மே 28 முதல் 30 வரை அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும், இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29̊̊ டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்: இன்று, குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை, தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மே 28ல் மரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மே 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்: இன்று, நண்பகல் வரை மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு, காற்றின் வேகம் குறைந்து 27.05.2024 காலை வரை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு காற்றின் வேகம் உயர்ந்து, மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதன் பிறகு, காற்றின் வேகம் குறைந்து நாளை காலை வரை 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும், மாலை வரை மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மே 28 ல் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மே 29 மற்றும் 30 ஆம் தேதிகளில், தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு, மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியமேற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்: இன்று, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை எந்த எச்சரிக்கையும் இல்லை. மே 28 ஆம் தேதி, மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மே 29 ல் மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மே 30 ஆம் தேதியில், மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.