சென்னை: தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்றைய தினம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று காரைக்கால், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியின் மாஹே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், வடகிழக்கு மத்தியப் பிரதேசம், ஜார்கண்டில் இன்றிலிருந்து வரும் 11ஆம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாகவும், பஞ்சாப், ஹரியானா, பீகார், ஒடிசா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், தென்மேற்கு பருவமழை அடுத்த இரண்டு மூன்று தினங்களில் மத்திய அரபிக்கடலின் பல்வேறு பகுதிகளிலும், மீதமுள்ள கர்நாடகாவின் சில பகுதிகளிலும், கடலோர ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலத்தின் சில பகுதிகள், தெலங்கானா, தெற்கு சத்தீஸ்கரின் சில பகுதிகள், தெற்கு ஒடிசா மற்றும் மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் முன்னேறுவதற்கான சாதகமான சூழல் நிலவிக் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - Tn Weather Update